புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2018

நடுக்கடலில் 3 நாள்களாக தத்தளித்த இந்தியக் கடற்படை அதிகாரி! - கடும் போராட்டத்துக்குப் பிறகு மீட்பு

 
இந்திய கடற்படை அதிகாரி
உலகைச் சுற்றிவரும் படகுப்போட்டியின்போது மோசமான வானிலை காரணமாக கடல் விபத்தில் சிக்கிக்கொண்ட இந்திய
கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி பத்திரமாக இன்று மீட்கப்பட்டார்.
பாய்மர படகில் உலகைச் சுற்றி வரும் `கோல்டன் க்ளோப்' என்ற பாரம்பர்ய போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. பிரான்சில் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கிய போட்டியில் இந்தியாவின் சார்பாக, இந்தியக் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி கலந்துகொண்டார். சுமார் 30,000 மைல் தூரம் கடலில் பயணிக்கும் இந்தப் போட்டியில் இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட எஸ்.வி துரயா படகில் பயணத்தை மேற்கொண்டார். இந்த நிலையில், 10,000 மைல்களுக்கு மேல் பயணித்தபோது மோசமான வானிலை காரணமாக டோமியின் படகு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால், ஆதரவு எதுவுமின்றி கடலில் இரண்டு நாள்களுக்குமேல் தத்தளித்து வந்தார். 
விபத்தில் சிக்கிக்கொண்ட அவரை மீட்பதற்காக இந்தியக் கடற்படையின் கப்பல்கள், விமானம் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியன விரைந்தன. அதோடு, ஆஸ்திரேலிய கடற்படையும் களத்தில் இறங்கியது. இந்த நிலையில், மொரீஸியசில் இருந்து நேற்று அதிகாலை 2 மணி அளவில் புறப்பட்ட பி8ஐ ரக விமானம் அபிலாஷ் படகு இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்தது. இதையடுத்து, அவரை மீட்கும் பணி தீவிரமாக்கப்பட்டது. இதனிடையில், `அபிலாஷ் டோமி இருக்கும் இடத்துக்கு பிரெஞ்ச் ஓசிரிஸ் மீன்பிடி கப்பல் (French Fishing vessel Osiris) விரைந்தது.
இந்த நிலையில், கடலில் தத்தளித்து வந்த இந்தியக் கடற்படை அதிகாரி கமாண்டர் அபிலாஷ் டோமி பத்திரமாக மீட்கப்பட்டார். முன்னதாக, மோசமான வானிலை காரணமாக டோமியை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. தற்போது, கடும் போராட்டங்களுக்கு இடையில் பிரெஞ்ச் ஓசிரிஸ் கப்பல் மூலம் அபிலாஷ் டோமி மீட்கப்பட்டுள்ளார். அவர், சுயநினைவுடனும், உடல்நலத்துடனும் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad