புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2018

ஜெ., மரணம் தொடர்பாக ரமேஷ்சந்த் அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடு: விசாரணை ஆணையம் தகவல்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆணையம் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளர் ரமேஷ்சந்த் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: ஆளுநர் அறிவுறுத்தலின்படி 2016 டிசம்பர்-5ம் தேதி மாலை 6 மணிக்கே புதிய முதல்வர் பதவியேற்பு ஏற்பாடுகளை முடித்துவிட்டோம். பணியாளர்களை இரவுவரை இருக்குமாறு மாலையே ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியது.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் டிசம்பர் 5 மாலை 6 மணிக்கு ஜெயலலிதா இறந்த செய்தி வெளியானது. இதற்கு அப்பல்லோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. பின்னர் டிசம்பர் 5 இரவு 11.30க்கு ஜெயலலிதா இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய முதல்வர் பதவியேற்பு ஏற்பாடுகளை செய்ய மாலையே ஆளுநர் எவ்வாறு உத்தரவிட்டார். ஜெயலலிதா இறந்த நேரம் குறித்து முதன்மை செயலாளர் ரமேஷ்சந்த் தெரிவித்த கருத்துக்கள் முரண்பாடாக உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் இன்று அப்பல்லோ மருத்துவர் பிரசன்னா ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் 2016 அக்.7க்கு பிறகு தேவைப்படும்போது ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. 120 முறை பிசியோதெரபி அளிக்கப்பட்டதாக விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் கூறியதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ad

ad