புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2018

15 போட்டிகளில் 26 ஸ்பொட் பிக்சிங்கள்’

அல்ஜஸீராவால் நேற்று வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில், 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற
ஆறு டெஸ்ட்கள், ஆறு ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், மூன்று உலக இருபதுக்கு – 20 போட்டிகளில் 26 ஸ்பொட் பிக்சிங்களில் அனீல் முனாவர் என போட்டிகளை நிர்ணயம் செய்பவர் பங்கெடுத்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஏழு போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களாலும் ஐந்து போட்டிகளில் அவுஸ்திரேலிய வீரர்களாலும் மூன்று போட்டிகளில் பாகிஸ்தானிய வீரர்களாலும் இன்னொரு போட்டியில் ஏனைய நாடொன்றிலிருந்தான வீரர்கள் மூலம் பிக்சிங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக குறித்த ஆவணப்படத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையே லோர்ட்ஸில் 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் போட்டி, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியாவுக்கிடையே கேப் டெளணில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி, 2011 உலகக் கிண்ணத்தின் ஐந்து போட்டிகள், இலங்கையில் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற மூன்று உலக இருபதுக்கு – 20 போட்டிகள் ஆகியன பிக்ஸிங் இடம்பெற்றதாக ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண ஆரம்பத்துக்கு முன்னர் முனாவரால் இங்கிலாந்து வீரரொருவருக்கு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடலை குறித்த ஆவணப்படம் கொண்டிருந்ததுடன், பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையே 2012ஆம் ஆண்டு டுபாயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது டி கம்பனி எனப்படுவதின் உதவியாளரொருவரை உமர் அக்மல் சந்தித்த புகைப்படங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், அல்ஜஸீராவின் ஒத்துழைப்பை மீண்டும் சர்வதேச கிரிக்கெட் சபை கோரியுள்ள நிலையில், குறித்த குற்றச்சாட்டை இங்கிலாந்து கிரிக்கெட் சபை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மறுத்துள்ளன.

ad

ad