ஞாயிறு, அக்டோபர் 28, 2018

பொன்சேகா என்னை கொல்வதற்கு சதி

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான சதிமுயற்சி காரணமாகவே மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதாக  தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் பொது எதிரணியினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் காரணமாகவே நான் மகிந்த ராஜபக்சவுடன்
இணைந்து அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் குறித்த விசாரணைகளின் போது முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகாவிற்கு தொடர்புள்ளமை குறித்த விபரங்கள் வெளியாகியிருந்தன எனினும் அரசியல் தலையீடுகள் காரணமாக அதனை மறைத்துவிட்டனர் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் போது வேறு சில முக்கிய நபர்களுக்கும் தொடர்பிருப்பதும் தெரியவந்தது என தெரிவித்துள்ள சிறிசேன விசாரணைகள் இடம்பெறுவதால் நான் மேலதிக விபரங்களை வெளியிட விரும்பவில்லை எனகுறிப்பிட்டுள்ளார்.
முழுமையான விபரங்கள் தெரியவரும்போது மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.