புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2019

விக்கி – டெனீஸ்வரன் விவகாரம்: தீர்ப்பு இன்று!

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தம்மை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கியது தவறு எனச் சுட்டிக்காட்டி, பதவியில் தொடர அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரி டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியிருந்தது.

அந்த உத்தரவில் உடனடியாக டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் தொடர்வதற்கு ஆவணம் செய்யுமாறும் மன்று பணித்திருந்தது.

எனினும் தாம் பணியில் தொடர அனுமதிக்கப்படவில்லை என்றும், நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை உதாசீனம் செய்தமை மூலம் முதல்வர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்றும் தெரிவித்து டெனீஸ்வரன் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்தார்.

அந்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்க முடியாது எனத் தெரிவித்து விக்னேஸ்வரன் சார்பில் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனை குறித்து விசாரணை நடத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு ஜனவரி 31ஆம் திகதி வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

அந்தத் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ad

ad