சனி, மார்ச் 02, 2019

18 பிளஸ்' அடல்ட் வெப் சீரியஸில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார்.


இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்துஇருந்தார்.

அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார்.

இப்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு சினிமா மார்க்கெட்டில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் வயதுக்கு வந்தோர் மட்டும் பார்க்கும் வகையிலான '18 பிளஸ்' என்ற வெப்சீரியஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் யாஷிகா. இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

#kodaiFun என்று ஹேஸ்டேக் போட்டு சில புகைப்படங்களை யாஷிகா ஆனந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெப்சீரியஸை குறிப்பிட்டு வெளியிட்டு இருந்தார்.

இந்த 18 பிளஸ் வெப்சீரியஸின் சூட்டிங் புகழ் பெற்ற கோடை வாசல் தளமான கொடைக்கானில் நடைபெறுவதாக தெரிகிறது. ஆனால் ஷுட்டிங் நடைபெறும் இடத்தை யாஷிகா தெரிவிக்கவில்லை