வெள்ளி, மார்ச் 01, 2019

சம்பியனானது தெல்லிப்பளை யூனியன்ஸ் பி அணிஅரியாலை சுதேசிய திருநாளின் 100ஆவது கொண்டாட்டத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட வலைப்பந்தாட்டத் தொடரில்,
தெல்லிப்பளை யூனியன்ஸ் பி அணி சம்பியனானது.
யாழ். மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட பெண்களுக்கான இந்த வலைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில், கொட்ஸ்ரார் அணியை வென்றே யூனியன்ஸ் பி அணி சம்பியனானது.
அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று நடைபெற்ற குறித்த இறுதிப் போட்டியின் ஆரம்பம் முதல் இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடியிருந்த நிலையில், இறுதியில் யூனியன்ஸ் பி அணி 26-23 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.