வெள்ளி, மார்ச் 15, 2019

தற்போதைய உடன்படிக்கை மாத்திரமே சாத்தியமானது: பார்னியர்


ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரித்தானியாவுக்குமிடையில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் மாத்திரமே சாத்தியமான ஒன்று என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தெரேசா மே கூறுவதுபோல் ஒழுங்கான முறையில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு நீங்குவதற்கு பிரித்தானியா விரும்பினால் தற்போதுள்ள ஒப்பந்தமொன்றால் மாத்திரமே அது சாத்தியமாகுமெனவும் அவர் வலியுத்தியுள்ளார்.

உடன்படிக்கைக்கு எதிராக அல்லாமல் ஆக்கபூர்வமான நேர்மறையான வாக்கெடுப்பு ஒன்றை நாம் பிரித்தானிய நாடாளுமன்றத்திடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் பார்னியர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரெக்ஸிற்றை எதற்காக பிற்போட வேண்டுமென வினவிய பார்னியர் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது எனவும் தெரிவித்துள்ளா