ஞாயிறு, ஜூலை 14, 2019

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துவோம்

தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. எனவே கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதில் தவறில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,
தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. எனவே கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதில் தவறில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி சமர்பித்த நம்பிக்கையில்லா பிரேணைக்கு கூட்டமைப்பு எதிராக வாக்களித்தமை தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மையமாக கொண்டு தான் ஜே.வி.பி நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தது என்றால் முதலில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையையே கொண்டு வந்திருக்க வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியோ அல்லது வேறு எந்த கட்சியோ யாராக இருந்தாலும் அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பிரேரணைகள் அனைத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

இது போன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுக் கொடுக்கவே நாம் முயற்சிக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.