புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2013


யூசுப் பதான், காலிஸ் ஆட்டத்தால் ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 47-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் கொல்கத்தா

 மைலம் நிதிநிறுவனம் பல கோடி மோசடி
சென்னை பால வாக்கத்தை சேர்ந்த ஜோதி, அகிலா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று புகார் கொடுக்க வந்தனர்.

கலைஞர், வைகோவை கைது செய்ததைபோல பழிவாங்க ஜெயலலிதா எந்த எல்லைக்கும் செல்வார்: பாமக தலைமை கண்டனம்
பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தியில்,
செய்யாத குற்றத்திற்காக பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி இராமதாசு அவர்கள்

ராமதாசை விடுவிக்க வேண்டுமென்று முதலமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன் : கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று நிருபர்களை சந்தித்தார். 

முருகன், சாந்தன், பேரரறிவாளன் தூக்கை ஆயுள் தண்டனையாக குறைக்க பிரதமரிடம் திமுக எம்.பி.க்கள் மனு

தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து மனு அளித்தனர். 

ராமதாசை கைது செய்ய மதுரை நீதிமன்றம் உத்தரவு
கடந்த 2004-ம் ஆண்டில் மதுரையில் ரஜினி ரசிகர் தாக்கப்பட்ட வழக்கில் ராமதாஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ராமதாசை கைது செய்ய மதுரை  நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை அடுத்து ராமதாசை ‌கைது செய்ய போலீசார் திருச்சி சென்றுள்ளனர்.

8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
ஐபிஎல் சீஸன்6 போட்டி எண் 47ல் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது.

3 மே, 2013


கனடாவின் மிகப் பெரிய மாகாணமான ஒன்றாரியோ மாகாணத்தில் தமிழ் மக்கள் ஆற்றிவரும் சேவைகள் நான் நன்கு மதிக்கின்றேன் என கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசின் முதல்வர் கெத்தலின் வெயின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த வர்த்தக மேம்பாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் சென்னை: கெவின் பீட்டர்சன்
டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் துடுப்பாட்டக்காரர் கெவின் பீட்டர்சன், சென்னை அணி ஐ.பி.எல் தொடரில் கோப்பை கைப்பற்றும் என்று ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில் அதிபரும் ஆசிரியரும் சண்டையிட்ட சம்பவம் ஒன்று சங்கானை கல்விக் கோட்டத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,சங்கானை கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற மெய்வன்மைப்போட்டிகள் வட்டக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில்

2 மே, 2013


கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக ப.சி. பிளான்..சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி?

கடந்த லோக்சபா தேர்தல் முடிவைக் கருத்தில் கொண்டும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமையின் அடிப்படையிலும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதிரடியாக திட்டம்

திருத்தணி அருகே அரசு பஸ் எரிப்பு
திருத்தணி மாவட்டம் கொடத்தூரில் அரசு பஸ் பா.ம.க., வினரால் வழிமறித்து எரிக்கப்பட்டது. 
இது சம்பந்தமாக போலீசார் தெரிவித்துள்ளதாவது: கொடத்தூர்பேட்டை இருந்து பொம்நாயக்கன்பேட்டை செல்லும் அரசு பஸ்சை பா.ம.க., வினர் வழிமறித்து கல் வீசியும் கண்ணாடியை உடைத்தும் எரித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர், மேலும் இது தொடர்பாக காஞ்சிபுரம் டி.ஐ.ஜி மற்றும் திருத்தணி எஸ்.பி, ஏ.எஸ்.பி தலைமையில் முகாமிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட பா.ம.,வினரை இன்று இரவுக்குள் கைது செய்வோம் என்று கூறினர்,

மதிமுக நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டது: வைகோ
தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் நிதி அளிப்புக் கூட்டத்துக்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று செய்தியாளர்களிடம் பேசினார். 

பாமக அங்கீகாரத்தை ரத்துச்செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
 

பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரத்தை சேர்ந்த வாரகி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த மனுவில், பாமக தொடர்ந்து சாதி வன்முறையை தூண்டும் வகையிலும், கலப்பு திருமணத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது,
பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு ஆகியோர் தொடர்ந்து சாதி மோதலை தூண்டும் வகையில் பேசி வருகிறார்கள். இதனால், இருபிரிவினர் இடையே அண்மையில் சாதி மோதல் ஏற்பட்டது. அண்மையில் மாமல்லபுரத்தில் நடந்த விழாவிலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் மனுதாரர் வாரகி தெரிவித்துள்ளார்.
மரக்காணம் அருகே நடந்த வன்முறைச் சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், இதனால் வட மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக அகில இந்திய தேர்தல் ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காஞ்சி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள், பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜெ.குரு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் வராகி கேட்டுக்கொண்டுள்ளார், 

ராமதாஸ், ஜி.கே.மணி உள்பட 6 பேரை மே 14 வரை காவலில் வைக்க திருக்கழுக்குன்றம் நீதிமன்றம் உத்தரவு
ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, குரு. கணேசன் உள்பட 6 பேர் மீது மாமல்லபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 6 பேர் மீதும் பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல் பிரிவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 பேரையும் மே 14ஆம் தேதி வரை காவலில் வைக்க திருக்கழுக்குன்றம் நீதிபதி சிவா உத்தரவிட்டுள்ளார்.



ராமதாஸ் மீது மேலும் இரண்டு வழக்குகள்? தமிழக அரசு மீது
பாமக வழக்கறிஞர் குற்றச்சாட்டு
பாமக நிறுவனர் ராமதாஸ் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் பாலு குற்றம் சாட்டியுள்ளார்.

ஐபிஎல்: சென்னை அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை 15 ரன் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. டாஸ் வென்று பேட்டிங் செய்த சென்னை அணி 4 விக்கெட்டுக்கு 186 ரன் குவித்தது. பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளைஇழந்து 171 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா 53 பந்துகளில் சதம் விளாசினார்.

சரப்ஜித் சிங் மரணம்: நீதி விசாரணைக்கு உத்தரவு
பாகிஸ்தான் லாகூர் நகரில் உள்ள லாக்பத் சிறையில் இந்தியர் சரப்ஜித் சிங் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தார். இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாண முதல்வர் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாகாண முதல்வர் (பொறுப்பு ) நிஜாம்சேத் கூறுகையில், சரப்ஜித் சிங் மரணம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கையினை 15 நாட்களுக்குள் சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
தவறான ரயில் பயணச்சீட்டைக் காட்டியதால் அமைச்சருக்கு அபராதம்
சுவிட்சர்லாந்தில் தவறான பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு தொடர்வண்டியில் பயணித்த அமைச்சர் தியரி குரோஸ்ஜீன்(Thierry Grosjean) என்பவர் பயணச்சீட்டு மதிப்பில் இரண்டு மடங்கை அபராதமாகச்

Chennai Super Kings 186/4 (20/20 ov)
Kings XI Punjab 171/6 (20.0/20 ov)
Chennai Super Kings won by 15 runs

ad

ad