புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2024

முறிகண்டியில் விபத்து - சிப்பாய் பலி, 7 பேர் காயம்

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர்  பலியானார். மேலும்  7 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்

குறித்த சம்பவம் இன்று காலை 6 மணியளவில் . முறிகண்டி வசந்தநகர் சந்தியில் இடம் பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்துக் கொணடிருந்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் வாகனம் முந்திச் செல்ல முற்பட்டுள்ளது. இதன்போது குறித்த கப் வாகனம் திடிரென இயங்காமல் நின்றுள்ளது. எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி விடும் எனும் அச்சத்தில் விபத்தை தருக்கும் நோக்குடன் சாரதி பாரஊர்தியை திருப்ப முற்பட்டுள்ளார்.

இதன்போது, கப் வாகனத்தில் பாரஊர்தி மோதியதில் அதில் பயணித்த இரண்டு இராணுவத்தினர் வீதியில் விழுந்துள்ளனர். அதில் ஒருவர் மேல் பாரஊர்தி ஏறியதில் குறித்த இராணுவ சப்பாய் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த 7 பேரில் இருவர் இரணைமடுவில் உள்ள இராணுவ வைத்தியசாலையிலும், மற்ற நால்வரும் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ad

ad