புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2015

வடக்கில்2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன்வரை நெல் கொள்வனவு


வடக்கு மாகாணத்தில் இதுவரையில்  2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று நெல் சந்தைப்படுத்தல்

நரஹென்பிட்டியில் மீட்கப்பட்ட விமானம் யோஷித்தவினுடையதல்ல! நீதிமன்றம்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ஷவின் விமானம் என கூறி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட

ஆறு மாத காலத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் வெளிச்சத்துக்கு வரும்!- டேவிட் கமரூன் நம்பிக்கை


இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்கள் மீண்டும் 6 மாத காலப்பகுதியில் வெளிச்சமிடப்படும் என்று பிரித்தானிய

ஜெயக்குமாரி நிபந்தனையுடன் பிணையில் விடுதலை


இலங்கையின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயகுமாரி

உலகக் கோப்பை கிரிக்கெட்; காலிறுதி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து அணி

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற

எமக்கு சுயாட்சி வேண்டும்! கனடா மறுவாழ்வு அமைப்பின் உதவி நிகழ்வில் இரா.சம்பந்தன்


தமிழர் பிரச்சினைக்கு பிராந்திய சுயாட்சி வழங்கிய பின்னரே மத்திய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுப்பேற்பது தொடர்பில்

நெஞ்சைப் பிழியும் ஒரு புனிதமான மடல்

என்னுடைய மனைவியையும், பிள்ளையையும் கடைசி வரை பார்த்துக்கொள்ளம்மா! முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட (Parallax) முன்னாள் போராளி தனது உயிர் பிரியும் நேரத்தில் கூறிய வார்த்தை இது!
09.03.2015

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், வவுனியா கற்பகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெஸ்ரின் மனோகரன் ஜெயக்குமார் 06.03.2015 அன்று மரணமடைந்தார்.இவர் 2009ம் ஆண்டு போராளியாக இருந்தபோது நெஞ்சில் எறிகணைச்சிதறல் பாய்ந்து முள்ளந்தண்டை தாக்கியதால் இறக்கும் வரை முள்ளந்தண்டுவடம் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்.

இவரது தகப்பனார் தாயை விட்டுப்பிரிந்து சென்றதால் இவருடன் சேர்ந்த மூன்று சகோதரர்களையும் தாயே பராமரித்து வருகிறார். முன்னாள் போராளியை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையிலும் தர்சினி என்ற இளம் யுவதி காதலித்து திருமணம் செய்து வாழ்க்கை கொடுத்த நிலையில், தற்போது மூன்று மாத கைக்குழந்தையுடன் கணவரை இழந்து 24 வயதில் விதவையாகியுள்ளார்.

தர்சினி தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறியே, முன்னாள் போராளிக்கு வாழ்க்கை கொடுத்து, நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்தது பெரும் தியாகம் ஆகும்.

முன்னாள் போராளி இறக்கும் இறுதி தருணத்தில் தாயாரின் கையைப்பிடித்து, அம்மா எனது மனைவியையும் பிள்ளையையும் இறுதி வரை நீங்க தான் அம்மா பார்க்க வேண்டும். கைவிட்டுறாதீங்க அம்மா என்று கண்ணீர் மல்க, தாயாரிடமிருந்தும், மனைவி தர்சினியிடமிருந்தும் விடைபெற்றார். நேரில் துக்கம் விசாரிக்க சென்ற வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தனிடம் ஜெயக்குமாரின் தாயார் புஸ்பலதா கண்கலங்கி தெரிவித்தார்.

நல்லுள்ளம் கொண்ட அன்பர்களே! முன்னாள் போராளிக்கு வாழ்வு கொடுத்த தர்சினிக்கும், அவரது மூன்று மாத குழந்தைக்கும், இவர்கள் இருவரையும் இறுதி வரை தம்மோடு வைத்து பராமரிக்கும் ஜெயக்குமாரின் தாயாருக்கும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

தாயாருக்கு ஒரு கடை ஒன்று இருப்பதாகவும், இரண்டு வருடங்கள் கடையை நடாத்தி வந்தபோதும் ஜெயக்குமாரின் மருத்துவ செலவு, பராமரிப்பு காரணமாக கடையை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றும் , தற்போது கடையை திறந்து வியாபாரம் செய்வதற்கு உதவ யாராவது முன்வர வேண்டும் என்றும், மருமகள் தர்சினியையும், குழந்தையையும் இறுதிவரை தன்னால் பராமரிக்க முடியும் என்றும் ஆனந்தன் எம்.பியிடம் போராளியின் தாயார் தெரிவித்தார்.

தொடர்புகளுக்கு: 0094 7744 92555, 0094 7765 22735தலைப்பு
என்னுடைய மனைவியையும், பிள்ளையையும் கடைசி வரை பார்த்துக்கொள்ளம்மா! முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட

9 மார்., 2015

சிங்கத்தை பிடரியில் அடித்து வீழ்த்தியது வங்கதேசம்


தி யன்ஸ்' என்று செல்லப்பெயர் கொண்ட இங்கிலாந்து அணியை பிடரியில் அடித்து வீழ்த்திய வங்கதேசம் உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்தது.
இந்த ஆட்டம் இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா? ஆட்டமாக இருந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தால் வங்கதேச அணி காலிறுதிக்கு முன்னேறி விடும் என்ற நிலையும் இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
வங்க தேச அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பாலும் இம்ருல் கயாசும் களமிறங்கினர். வங்க தேச அணி 3 ரன்கள் எட்டிய போது இம்ருல் கயாஸ் அவுட் ஆனார். 2 ரன்களே எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்தில் ஜோர்டானிடம் அவர் பிடி கொடுத்தார்.

கோட்சேவுக்கு எதிராக பேசினால் சுட்டுக்கொல்வோம்`


 கோட்சேவுக்கு எதிராக பேசினால் தபோல்கர், பன்சாரேவைப் போல உன்னையும் சுட்டு கொல்வோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவுக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேவில் முற்போக்குவாதி நரேந்திர தபோல்கரும், கடந்த மாதம் கோல்காபூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கோவிந்த பன்சாரேவும் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்  கொலை செய்யப்பட்டனர். இரண்டு சம்பவங்களும் காலையில் நடைப் பயிற்சி செய்த போது நடைபெற்றுள்ளன.

குத்திவிட்டான் டார்லிங்... சாவதற்கு முன் கணவரிடம் பேசிய பொறியாளர்! (வீடியோ)


 ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண் பொறியாளர் பிரபா, தனது கணவரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது கடைசியாக 'என்னை கத்தியால் குத்திவிட்டான் டார்லிங்' என தெரித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த அருண் குமார்- பிரபா (39) தம்பதியருக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார் பிரபா. வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார் பிரபா.

காமன்வெலத் அலுவலகம் கவனயீர்ப்பு போராட்டம்

மைத்திரி பால , இன்று 09-03-15 காமன்வெலத் நாடுகளின் அலுவலகம் செல்லவுள்ளார். அந்த வேளை கவனயீர்ப்பு போராட்டம் 

வட மாகாணக் கல்வி அமைச்சின் அலுவலகம் முற்றுகை: அடைபட்டனர் அமைச்சர்கள், அதிகாரிகள்


வன்னிப் பிரதேசத்தில் இருந்து இடமாற்றம் கோரிய ஆசிரியர்கள் இன்று வடமாகாணக் கல்வி அமைச்சை முற்றுகையிட்டு அமைச்சர்களையும்,

சுதந்திரக்கட்சியினர் சிலர் யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்

ஸ்ரீ.சு.கவின் திட்டமிடல் குழுவின் தலைவியாக சந்திரிக்கா நியமனம்


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைவியாக முன்னாள் ஜானாதிபதி சந்திரிக்கா

உலகக் கோப்பை கிரிக்கெட்; காலிறுதி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து அணி





உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து

சங்கக்காரஓகஸ்ட் மாத இறுதியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

 
எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கை

வயலின் கலைஞராக அசத்திய சங்கக்காரா

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா, சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதுடன் தொலைக்காட்சி

எங்கள் பிள்ளைகளை இரகசியமுகாமில் தான் வைத்திருக்கின்றார்கள்; உறவுகள் கதறல்


எனது பிள்ளையை இரகசிய முகாமில் தான் தடுத்து வைத்திருக்கின்றார்கள் உயிருடன் தான் என் பிள்ளை இருக்கின்றான் என தாயொருவர்

29 புதிய தூதுவர்கள் விரைவில் நியமனம்


"வெளிநாடுகள் பலவற்றுக்குப் புதிய தூதுவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று வெளிவிவகார

விதவைகளை மறுமணம் செய்ய இளைஞர்களே முன்வாருங்கள்: மாவை எம்.பி


இளம் விதவைகளை மறுமணம்; செய்து கொள்ள தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று  தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்

ad

ad