புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2011









ராஜீவ் படுகொலையை அரசியல் ஆக்க வேண்டாம்: ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கண்டனம்

ராஜீவ் காந்தி படுகொலையை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 
சென்னையில் 24.05.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா, ராஜீவ்காந்தி கொலையில் திமுகவை தொடர்பு படுத்திப் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, ராஜீவ்காந்தி கொலை மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்வு. இந்த சம்பவம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு. 
மிகவும் உணர்ச்சிகரமான அந்த துயரச் சம்பவத்தை யாரும் அரசியலாக்க முயற்சி செய்ய வேண்டாம். இதனை யாரும் அரசியலாக்க முயற்சிப்பதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது. இவ்வளவு பெயரி துயரச்சம்பவத்தை அரசியலாக்க முயற்சிப்பது கண்டனத்துக்குறியது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அச்சம்பவம் அரசியலாக்கப்படுவதில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.




ஜெயலலிதா ஆட்சி அமைய நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய பெண்ணுக்கு அரசு வேலை!


அதிமுக ஆட்சி அமைய வேண்டி நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய திருவாடனை தாலுகா தொண்டியை சேர்ந்த சரிதாவுக்கு சத்துணவு உதவியாளர் வேலை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவையும், எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் காசோலையையும் தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாடு முதல் அமைச்சராக வரவேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, தொண்டியைச் சேர்ந்த கே.சரிதா, தேனி மாவட்டம வீரபாண்டியில் உள்ள கவுரியம்மன் கோவிலில் 13ந் தேதி அன்று தனது நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளார்.

இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் கணவனால் கைவிடப்பட்டு ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார்.  இவர் தனது நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தியதை அறிந்ததும் ஆண்டிப்பட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவியும், அதனைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்த நிகழ்வு குறித்து அறிந்ததும் பாதிக்கப்பட்ட கே.சரிதாவை உடனடியாக சென்னைக்கு வரவழைத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கே.சரிதாவுக்கு தேவையான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சரிதா கணவனால் கைவிடப்பட்ட நிலையில் அவரின் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல்  அமைச்சர் ஜெயலலிதா 24ந் தேதி தலைமை செயலகத்தில் சரிதாவின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சத்துணவுத் துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

இதன் மூலம் சரிதா மாத ஊதியமாக ரூ.2077 பெறுவார். மேலும் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையின் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சரிதாவின் சிகிச்சைக்கான முழுக்கட்டணத் தொகை 36,195 ரூபாய் செலுத்தவும் உத்தரவிட்டார்.
 
எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இதைத்தவிர அவர் வசிப்பதற்கு சொந்த கிராமமான தொண்டியில் வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான மாத வாடகையாக எம்.ஜி.ஆர். அறக்கட்டளையின் மூலம் தொடர்ந்து வழங்கிடவும் ஆணையிட்டார்.

முதல் அமைச்சரிடம் பணி ஆணையையும், நிதி உதவியையும் பெற்றுக் கொண்ட சரிதா, தான் நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தியதை அறிந்ததும் உடனடியாக மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து தனக்கு தேவையான சிகிச்சையை அளித்ததற்கும், சத்துணவு உதவியாளர் பணி மற்றும் நிதி உதவிகளையும் வழங்கியதற்கு ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர்: வைகோ

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணித்ததை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர் என, வைகோ பேசினார்.

ம.தி.மு.க. 18ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிவகாசி பகுதியில் ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோட்டில் ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ,

வெற்றி, தோல்விகளை சமமாக கருதுபவன் நான். என் அரசியல் பயணம் ஒளி மண்டலமாகவும், இருள் சூழ்ந்ததாகவும் இருந்து வருகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பு கொலைப் பழி சுமத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட நாள் முதல் இன்று வரை எனக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இதுவரை நாங்கள் யாரையும் பகைத்து கொண்டதில்லை. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறேன். ஏனெனில் இதனால் அங்குள்ள மக்களுக்கு நோய்கள் ஏற்பட்டு வருவதோடு இயற்கை வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்கால தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றேன்.

இதுதொடர்பாக கோர்ட்டில் வாதாடும் போது, இந்த போராட்டத்தில் மக்கள் உங்களோடு சேர்ந்து ஏன் ஆதரவாக போராடவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு நான், சுதந்திரம் வேண்டும் என்பதற்காக 1000 பேர் தான் போராட்டம் நடத்தினார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். உடன் சேர்ந்து போராடவில்லை என்பதற்காக அவர்கள் எனக்கு ஆதரவு தரவில்லை என்பதாக எடுத்துகொள்ள கூடாது என்றேன். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

ம.தி.மு.க. விடுதலைபுலிகளுக்கு ஆதரவான கட்சி என விமர்சனம் உள்ளது. நாங்கள் ஈழ மக்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம். தமிழ்நாட்டில் வன்முறை இருக்ககூடாது என நினைப்பவர்கள் நாங்கள். இதனால் பல சந்தர்ப்பங்களில் நான் கைது செய்யப்பட்டபோது ம.தி.மு.க. வினர் எந்த வன்முறையிலும் ஈடுபட்டதில்லை.

மக்கள் நலனுக்காக ம.தி.மு.க. தொடர்ந்து போராடும். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணித்ததை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர். அதேநேரத்தில் இந்த தேர்தலில் பணம் மூலம் ஜனநாயகத்தை விலைக்கு வாங்க முடியாது என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

என்னை வருங்கால முதல் அமைச்சர் என சிலர் வரும்போது வாழ்த்தி கோஷம் போட்டனர். இது என் மீது உள்ள அன்பால், பாசத்தால் கூறுகிறார்கள் என்பதை உணர முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் புகழ் போதை பள்ளத்தில் தள்ளிவிட்டு விடும் என்பதால் அந்த வார்த்தையை நான் கவனத்தில் கொள்வது இல்லை.

ராமன் ராவணன் இடையே நடந்த யுத்தம் 18 மாதம் நடந்தது. குருஷேத்திர போர் 18 நாட்கள் நடந்தது. அதேபோல் ம.தி.மு.க. 18 ம் ஆண்டுவிழா தொடங்க விழாவை கொண்டாடி வருகிறோம். நேர்மையான, ஊழலற்ற, சுயநலமற்ற அரசியல் நடத்தி தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். இவ்வாறு வைகோ பேசினார்.

ஐபிஎல்: இறுதிபோட்டியில் சென்னை அணி




ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 24.05.2011 அன்று மும்பையில் நடந்த முதலாவது  பிளே ஆப்' சுற்று ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரிடையாக ‌இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ்வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. 
இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 19.4 ஓவரில் 177ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்‌ போட்டியில் நுழைந்தது.

கருத்துகள் இல்லை:

ad

ad