புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2011


இன்ரனெட் கபே செல்லும் ஜோடிகளே கவனம்! உங்கள் காமலீலைகள் வெளியாகும்!!(பட இணைப்பு)


இன்ரனெட் சேவை வழங்கும் கடைகளுக்குச் செல்லும் இளம் ஜோடிகளின் தவறான நடவடிக்கைகளை வீடியோ படமெடுத்து வெளியிடும் சம்பவம் அண்மையில் யாழ் நகரில் அதிகரித்திருக்கிறது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள சில இன்ரனெட் சேவை வழங்கும் கடை உரிமையாளர்கள் அங்கு வரும் வாடிக்கையாளர்களான இளம் காதலர்கள் செய்யும் காம லீலைகளை தங்கள் அதி நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி அவர்களுக்குத் தெரியாமல் தங்கள் கணினியில் வீடியோப் படம் பிடிக்கின்றனர்.

அந்த வகையில் அண்மைய நாட்களில் யாழ் பல்கலை காதல் ஜோடி எனும் பெயரில் வீடியோக்கள் சில முறைகேடான இணையத்தளங்களில் வெளிவந்தது.

இது தொடர்பாக எமக்குத் தெரியவருவது, 

இன்ரனெட் சேவை வழங்கும் இந்தக் இன்ரனெட் கபேயினர் தங்கள் கடையில் அதிநவீன வசதிகள் கொண்ட கணினித் தொகுதியை சிறிய மூடிய அறைகளாகப் பிரிக்கப்பட்டதாக உருவாக்கி வைத்துள்ளனர்.

இந்த அறைகளுக்குள் உள்ள கணினியுடன் வெப் கமரா பொருத்தப்பட்டு ஸ்கைப் வசதியும் ஏற்படுத்தப்பட்டு அந்தக் கணினியின் ஸ்கைப் கணக்கு தங்கள் பிரதான கணினியுடன் தொடர்பேற்படுத்தப்பட்டு அதனை பணிப்பட்டியில் (TaskBar) தெரியாதவாறு மறைத்துக் காணப்படும்.

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிரத்தியேக வகுப்பிற்குப் போகும் இளம் காதல் ஜோடிகள் வகுப்பு செல்லாமல் தங்கள் மானத்தைப் போக்க பெற்றோரின் பணத்தை எடுத்துக் கொண்டு இங்கு கூடிவிடுகின்றனர்.

இதனால் அந்தக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கடை உரிமையாளர்கள் தங்கள் காட்டும் கணினி அறைகளிலேயே இந்தக் காதல் ஜோடிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.



அங்கே தயார் நிலையி்ல் கணினியும் இணையக் கமராவும் காணப்படுகின்றது என்பது தெரியாமல், கணினியை ஆராயாமல் அறைக்குள் சென்றவுடனேயே தங்கள் காம லீலைகளை நிகழ்த்த ஆரம்பித்துவிடுகின்றனர்.

இதனை பிரதான கணினியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் கடை உரிமையாளர் தனக்குத் தேவையான காட்சிகளை வீடியோவாகவும், போட்டோவாகவும் சேமித்து வைத்து பிறருடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இன்று எமது மண்ணின் கலாசாரச் சீரழிவுக்கு இந்த இணையமும், இன்ரனெட் கபேகளும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றன.

அந்த வகையில் இன்ரனெட் சேவை வழங்கும் கடை உரிமையாளர்களே! நீங்கள் இந்தச் கலாச்சார சீரழிவுக்கு உடந்தையாக இராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயத் தேவையாக உள்ளது.

உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களது தனிப்பட்ட இரகசியங்களை பாதுகாக்க வேண்டிய கடப்படு உங்களுக்கு உள்ளது. அதேநேரம் அவர்களை மூடிய அறைக்குள் விடும்போது அவர்கள் தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைக்கிறது.

மூடிய அறையில்லாமல், திறந்த வெளியில் ஓரளவு மூடியதாக கணினியை வைக்கலாம். இதனால் இவ்வாறான கலாசாரச் சிரழிவுகள் வராமல் தடுக்கலாம்.

ad

ad