கொவிட் வைரஸை கட்டுப்படுத்த பெறப்பட்ட தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 2023 இல் ஐரோப்பிய மருந்துகள் முகமை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஃபைசர் தடுப்பூசி போட்ட 8,000 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியைப் பெற்ற 1,500 பேர் மட்டுமே இறந்துள்ளனர். |
-
14 மே, 2024
கொவிட் தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் பலி!
ரஷ்யாவுக்கு கூலிப்படையினரை அனுப்பும் மோசடிக்குப் பின்னால் உதயங்க வீரதுங்கவா?
ரஷ்ய யுத்த களத்துக்கு இலங்கையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை சட்டவிரோதமான முறையில் அனுப்பும் மோசடியின் பின்னணியில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் தொடர்புப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்த சுயாதீன எதிரணி எம்.பி.யான காமினி வலேபொட, பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்தம் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆகவே இந்த நாடுகளின் யுத்தக் களத்துக்கும் இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்படலாம் எனவும் தெரிவித்தார் |
முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை ஒருபோதும் நிம்மதியாக வாழவிடாது!
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பசியில் வாடி கஞ்சிக்காக வரிசையில் நின்ற குழந்தைகள் மீது குண்டுகளை வீசி கொலை செய்ய கோட்டாபய ராஜபக்ஷ கட்டளை பிறப்பித்தார். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்த ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருபோதும் நிம்மதியோடு இருக்கப்போவதில்லை. இறந்துபோன முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள்,இவர்களை ஒருபோதும் நிம்மதியாக இருக்க விடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். |
விஞ்ஞான பரீட்சையில் நீக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து 12 புள்ளிகளுக்கான வினாக்கள்!
தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து விஞ்ஞான பாடத்துக்கு 12 புள்ளிகளைக் கொண்ட வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கற்பிக்காத பாடப்பரப்பில் இருந்து கேள்வி கேட்கும் போது பரீட்சாத்திகள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ரோஹிணி கவிரத்ன கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார் |
இனவாதப் பொலிசாரின் எடுபிடிகளாகியுள்ள நீதிமன்றங்கள்! - கஜேந்திரன் காட்டம்.
வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா? பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா ? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார் |
பள்ளிமுனை கடற்பரப்பில் காற்றுடன் கடும் மழை - வள்ளம் கடலில் மூழ்கி மீனவர் பலி
மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் இருந்து நேற்று மாலை வள்ளத்தில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வள்ளம் மூழ்கி கடலில் விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர் மன்னார் பள்ளிமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.ஜான்சன் என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். |