புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிச்சயமாகத் தோல்வியைத் தழுவும் என்று சிறிலங்கா அரசுக்கு புலனாய்வு அமைப்புகள் தகவல் வழங்கியுள்ளதாககொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபைக்கு வரும் 8ம் நாள் நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்கட்சிகளின் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளதாக அந்த புலனாய்வு
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பரப்புரைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் நிலையிலும் அதற்கடுத்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும், ஐதேக ஆகியன இரண்டாம், மூன்றாம் இடங்களிலும் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி, கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளதாகவும் புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்த கிழக்கு மாகாண நிலவரம் தொடர்பான இரகசியக் கலந்துரையாடல் ஒன்று, நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் பொலன்னறுவவில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்தாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மட்டகளப்பில் நேற்று தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டிருந்தார்.

இன்று அவர் திருகோணமலையில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

ad

ad