புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2012



கிழக்கு மாகாணசபையில் யாருக்கு ஆதரவளிப்பது என நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. அரசாங்கத்துடன் நடந்த பேச்சின் போதும் அவர்களுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலஙகா முஸ்லீம் காங்கிரஷிற்கும் இடையில் இன்று கொழும்பில் உள்ள ஹொட்டல் ஒன்றில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் சார்பில் ஆர்.சம்பந்தனும், சுமந்திரனும் கலந்து கொண்டனர். ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மட்டக்களப்பிலும் சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்திலும் இருப்பதால் அவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் சார்பில் ரவூப் ஹக்கீமும், பஷீர் சேகுதாவுத்தும் கலந்து கொண்டனர். சந்திப்பு சுமார் இரு மணிநேரம் நடைபெற்றது.
சந்திப்பின் ஆரம்பத்தில் சம்பந்தன் சுமார் ஒரு மணி நேரம் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் பற்றியும், வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் தேசிய பிரச்சினை தீர்வுக்கு இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் விளக்கினார். வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையில் இருக்கும் பல்வேறு பிரச்சி;னைகளுக்கு இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே இரு சமூகங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் என சம்பந்தன் தெரிவித்தார்.
இதை கேட்டுகொண்டிருந்த ஹக்கீமும் பஷீரும் நீங்கள் சொல்வது சரிதான் ஜயா ஆனால் நாங்கள் கிழக்கு மாகாணத்தில் யாருக்கு ஆதரவளிப்பது என தீர்மானி;க்கவில்லை. மகிந்த ராசபக்சவுக்கும் நாங்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அம்பாறைக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடித்தான் யாருக்கு ஆதரவு வழங்குவது என முடிவெடுக்க முடியும் என தெரிவித்தனர்.
பஷீர் சேகுதாவுத்தின் பேச்சை பார்த்தால் அவர் அரசிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கிறார் என இச்சந்திப்பில் கலந்து கொண்ட சுமந்திரன் தெரிவித்தார்.
நாங்கள் மக்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்து அதன் அந்த முடிவை உங்களுக்கு அறிவிக்கிறோம் என கூறிவிட்டு ஹக்கீமும் பஷீரும் சென்றனர்.
பாவம் சம்பந்தன் இன்னமும் ஹக்கீமின் பேச்சில் நம்பிக்கை கொண்டு அவரின் பதிலுக்காக காத்திருக்கிறார்.
சம்பந்தன் ஹக்கீமின் பேச்சை நம்பலாம், ஆனால் இனியும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷின் சம்மதம் கிடைக்கும் என நம்பிக்கொண்டிருக்க நாங்கள் தயார் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தினக்கதிருக்கு தெரிவித்தார்.

ad

ad