புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2012


மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் தீக்குளிப்பு! அவர் வழங்கிய பேட்டி உள்ளே.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் போஸ் மைதானத்தில் இன்று காலை ஒருவர் தீக்குளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொதுமக்களும், சேலம் பொலிஸாரும் தீக்குளித்தவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
ஜனாதிபதி மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்தவர் ஆட்டோ டிரைவர் எனவும், அவரது பெயர் விஜயராஜ் எனவும் தெரியவந்துள்ளது.
இன்று காலை குறித்த நபர், சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் உரக்க கத்தினார் என்று கூறப்படுகிறது.
அப்போது திடீர் என்று உடலில் தீ வைத்துக் கொண்டதாக பேருந்து நிலையத்தில் நின்ற பொதுமக்கள் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலத்தில் ஆட்டோ டிரைவர் இன்று அதிகாலை தீக்குளித்துள்ளார்.
சேலம் நெத்திமேடு அருகே உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் விஜயராஜ். இன்று அதிகாலை 5 மணி அளவில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஷேர் ஆட்டோ நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தமது ஆட்டோவில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்தார்.
அதன் பின்னர் "இந்தியாவுக்கு ராஜபக்ச வருவதைத் தடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி தமது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் அவர் உடல் முழுவதும் தீ பற்றி எரிய அருகே இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.
இது தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடலில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமாக தீக்காயம் இருப்பதால் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாம் தீக்குளித்தது குறித்து விஜயராஜ் கூறுகையில், ராஜபக்ச இந்தியா வருவதை யாரும் விரும்பவில்லை. இதனால் அவரது வருகையை தடுக்க வேண்டும், இதை வலியுறுத்தி தான் நான் தீக்குளித்தேன் என்றார்.
விஜயராஜ் தீக்குளித்தது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில்,
இலங்கை தமிழர்கள் மீது விஜயராஜ் பற்றாக இருப்பார். எப்போதும் இலங்கை பிரச்சினை பற்றித்தான் பேசி கொண்டார். இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டார். விஜயராஜை பார்த்து நாங்கள் என்ன இன்று சீக்கிரம் வந்துவிட்டாய் என கேட்டதற்கு சிரித்தார். ஆனால் பதில் ஏதும் கூறவில்லை. சுமார் 5மணியளவில் விஜயராஜ் என்ன நினைத்தாரோ பெட்ரோலை தன்மீது கொட்டி தீவைத்து கொண்டார். ராஜபக்சவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார் என்றனர் அவர்கள்.
தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்சவை எதிர்க்க வேண்டும்! தீக்குளித்த விஜயராஜ் பேட்டி!
விஜயராஜ் தினம் டைரி எழுதும் பழக்கமுடையவர். வைகோ, சீமான், கொளத்தூர் மணி கலந்துகொள்ளும் கூட்டங்களில்  பங்கேற்கும்போது, அங்கு ஏற்படும் உணர்வுகளை தனது டைரியில் பதிவு செய்து வந்துள்ளார்.
தீக்குளிப்புக்கு முன்பு  அவர் தனது டைரியில் எழுதியிருப்பதாக இந்திய இணையத்தளமொன்றின் நிருபரிடம் கூறியதாவது,
இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள், டாங்கிகள், கனரக விமானங்கள் கொடுத்து தமிழர்களுக்கு தொடர் துரோகம்  இழைத்துள்ளது. இந்த மத்திய அரசும், சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த  வேண்டும்.
என்னுடைய உயிர் ஆயுதத்தை பார்த்து தமிழர்கள் ராஜபக்சவை செருப்பால் அடிக்க வேண்டும்.  அதற்காகத்தான் இதை நான் செய்தேன். ராஜபக்சவை இந்தியாவிற்குள் விடக்கூடாது.
இத்தனை வீரமரணத்திற்கும் பிறகும் ராஜபக்சவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுக்கிறது. இதை பார்த்தாவது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப்  பெற்று ராஜபக்சவை எதிர்க்க வேண்டும் என்றார் பலத்த தீக்காயங்களுடன் அவதிப்பட்டுக்கொண்டே.
மருத்துவர்கள் அவரை பேசக்கூடாது என்று கூறியும், நான் எனது உணர்வுகளை மீடியாக்கள் மூலம் தமிழகத்துக்கு  தெரிவிக்கிறேன். என்னை பேசவிடுங்கள் என்றார்.
விஜயராஜ் குறித்து நாம் மருத்துவர்களிடம் கேட்டபோது, 80 சதவீதத்திற்கு மேலாக தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சையில் இருக்கிறார். காப்பாற்ற முயற்சி செய்கிறோம் என்றனர்.
அவரது ஆட்டோவில் வைக்கப்பட்டுள்ள டைரியில் ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைய தகவல்களை எழுதியிருப்பதாக கூறியதை தொடர்ந்து அவரின் ஆட்டோவிலிருந்த “டைரி”யை பொலிஸார் விசாரணைக்காக கைப்பற்றியுள்ளார்கள்.
இந்த தகவல் கிடைத்ததும், சேலம் நகரம் மட்டுமில்லாது மாவட்டத்தின் பல பகுதிகளிளுமிருந்து தமிழின உணர்வாளர்கள் சேலம் மருத்துவமனைக்கு வந்தனர். இதை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே வரும் 21-ந் தேதி மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெறும் புத்த மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். அவரது இந்திய வருகைக்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ad

ad