செவ்வாய், நவம்பர் 13, 2012

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வாள்வெட்டில் படுகாயம்; உரும்பிராயில் சம்பவம்
உரும்பிராயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வாள்வெட்டுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த குடும்பத்திற்கும் மற்றொரு குடும்பத்தினருக்குமிடையில் கடந்த சில வருடங்களாக இருந்துவந்த
பிரச்சினையே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் குறித்த குடும்பத்தினரின் வீட்டிற்குச் சென்ற சுமார் 20 பேர் கொண்ட குழு இந்த வாள்வெட்டை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந் வாள்வெட்டுச் சம்பவத்தில் 57 வயதான விநாயகமூர்த்தி, அவருடய மனைவியான சுதர்ஷனி (வயது 47) மற்றும் இவர்களின் மகன்களான சுதர்ஷன் (வயது 27), சுகிர்தன் (வயது 21) ஆகியோர் காயங்களுக்குள்ளான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் குறித்து, கோப்பாய் காவற்றுறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர் எனனவும் தெரிவிக்கப்படுகின்றது.