புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2013

இந்தியா ஏன் சிங்களத்திற்கு பயப்படுகிறது.. சிங்களம் சீனாவின் பக்கம் சாய்ந்த பின்னும் ஏன் சிங்களத்தின் காலை நக்குகிறது.? பதிலுக்கு சுப்ரமணியம் என்ற RAW அதிகாரியின் பின்வரும் குறிப்பை படிக்கவும்..#

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருந்தபோதும் மக்களின் மத்தியில் விடுதலைப் புலிகளி
ன் தலைவர்கள் பதுங்கியிருந்த இடங்களை RAW அமைப்பு சரியாக இனங் காட்டியிருந்தபோதும் முள்ளி வாய்க்காலுக்குள் போரற்ற பகுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் குழுமியிருந்த பகுதியில் வலுவான தாக்குதல்களைத் தொடுக்குமாறு ஒரு குரூரமான திட்டத்தை இந்தியாவின் எம். கே. நாராயணனும் சிவசங்கர மேனனும் இலங்கையை அறிவுறுத்தினர். 

இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி பொன்சேகா தரும் தகவலின்படி பொதுமக்கள் இழப்புகளைக் குறைக்கும் வகையில் ஆகஸ்ட் மாத அளவிலேயே இறுதி வலிந்த தாக்குதலை நடத்துவதெனத் திட்டமிடப்பட்டிருந்தது. 

ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையை அழிக்க வேண்டும் என்று உறுதிப்பாட்டின் பேரில் செயற்பட்ட சோனியா காந்தியின் அதிகாரம் பெற்ற முகவர்களான எம். கே. நாராயணனும் சிவசங்கர மேனனும் மேலும் தாமதித்தால் அமெரிக்கா விடுதலைப் புலிகளின் தலைமையையும் பொதுமக்களையும் வெளியேற்றுவதற்கு வழிசெய்துவிடும் என அஞ்சினர். இதன் விளைவுதான் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலை.

கொழும்பு போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேர்ந்தால், அதற்கு புதுதில்லியும் உடந்தையாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாத்த சோனியாவின் அதிகாரம் பெற்ற ஆட்களுடனான உரையாடல் பதிவைக் கையிலெடுக்கப் போவதாக கோத்தபய அச்சுறுத்தினார். இது தில்லியின் வாயை அடைத்தது

ad

ad