புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2013




            ""ஹலோ தலைவரே... தி.மு.க எடுத்த நிலைப்பாட் டையும் அதற்கு காங் கிரஸ் தரப்பின் ரியாக் ஷனையும் நம்ம நக்கீரனில் விரிவா படிச்சிருப்பீங்க.''nakeeran

""இப்பதாம்ப்பா படிச்சேன்,… ஒவ்வொரு நாளும் என்ன டெவலப்மெண்ட்டுங்கிறதை டீடெய்லா எழுதியிருக்காங்களே! தேசிய அளவிலும் இந்த விவகாரத்தை உற்றுப் பார்க்கிறாங்களாமே?''

""ஆமாங்க தலைவரே… 2004-ல் காங்கிரசோடு தி.மு.க கூட்டணி அமைத்தபிறகுதான் தேசிய அளவில் பல கட்சிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தன. அரசியலின்போக்கு எப்படி இருக்கும் என்பதை மூத்த அரசியல்தலைவரான கலைஞர் கணிச்சதாலதான் அவர் காங்கிரசோடு கூட்டணி சேர்கிறார்னு லாலுபிரசாத் யாதவ் போன்ற வடஇந்தியத் தலைவர்களும் காங்கிரஸ் பக்கம் வந்தாங்க. வலுவான கூட்டணியும் அப்ப அமைந்தது. பா.ஜ.க கூட்டணியிலிருந்து தி.மு.க.  வெளியே வந்தப்ப, காங்கிரஸ் தரப்பு எப்படி எதிர்பார்த்ததோ, அதுபோல இப்ப காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. வெளியேறும்ங்கிற எதிர்பார்ப்போடு தேசிய அளவில் பா.ஜ.க. சில கணக்குகளைப் போடுதுங்க தலைவரே...''…

""காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. வெளியே வரணும்னு பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் வெளிப்படையாகவே சொல்லியிருக்காரே!''

""அதுமட்டுமில்லீங்க  தலைவரே.. .. பார்லிமெண்ட் சென்ட்ரல் ஹாலில் தி.மு.க. எம்.பி.க்களை பா.ஜ.க. எம்.பி.க்கள் அடிக்கடி சந்திச்சிப் பேசுறாங்க. தமிழக அரசியல் நிலைமைகளை விசாரிச்சிட்டு, நம்ம பக்கம் வந்திடுங்கன்னு ஓப்பனாவே சொல்றாங்களாம். எதிர்க்கட்சித்தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் ரொம்ப வெளிப்படையாகவே, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியே வாங்க. உங்க தலைவர்கிட்டே நாங்க சொன்னதாகவே சொல்லுங்க. இலங்கையில் நடந்த யுத்தத்துக்கு ராஜபக்சே மட்டும் காரணமில்லை. சோனியாவின் விருப்பமும்தான். இனியும் காங்கிரஸை நம்பவேண்டாம். நாம கூட்டணி அமைக்கலாம். ஈழப்பிரச்சினையைப்  பொறுத்தவரை தனிஈழம்ங்கிற கோரிக்கையைத் தவிர, தமிழர்  நலனுக்கும் உரிமைக்குமான மற்ற எல்லா விஷயங்களுக்கும் பா.ஜ.க. துணை நிற்கும். அதை இப்பவே எழுதியும் கொடுக்கிறோம். நாங்களும் ஜெ.வை நம்பி எந்த நேரத்திலும் ஏமாறுவதைவிட, கலைஞரைப் போன்ற நம்பிக்கையான மூத்த தலைவரோடு கூட்டணி அமைக்கத்தான் விரும்புறோம்னு சொல்லிக்கிட்டிருக்காராம்.'' 

""பா.ஜ.க. கூட்டணியில்தானே அகாலிதளம் இருக்குது. அந்த கட்சியின் சீனியர் தலைவரும் தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித்சிங் பர்னாலா திடீர்னு சென்னை சி.ஐ.டி. காலனி வீட்டில் கலைஞரை சந்திச்சிப் பேசியிருக்காரே, அந்த சந்திப்பும் கூட்டணி சம்பந்தமாகத்தானா?

""இங்கே ஒரு கல்லூரி விழாவுக்கு வந்த பர்னாலா, தன்னோட நண்பரான கலைஞரை சந்திச்சாரு. காங்கிரசுக்கு எதிரான கருத்துகளைத்தான் அவர் அந்த சந்திப்பின்போது சொல்லியிருக்காரு. ஆனா, அவர்கிட்டே கலைஞர் எதுவும் கமிட்டாகலையாம். அவர் அவ்வளவு சீக்கிரமா பிடிகொடுக்க மாட்டாருங்கிறது தேசிய அரசியலில் உள்ள தலைவர்களுக்குத் தெரியும். அதே நேரத்தில், தன்னோட முடிவுக்குத் தகுந்தமாதிரி மெதுவா காய் நகர்த்தி, அது கனிகிற நேரத்தில் முடிவை அறிவிப்பது கலைஞரின் வழக்கம். இதை தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களும் புரிஞ்சிருப்பதாலதான் ரொம்ப பதட்டமா இருக்காங்க.''


""அவங்க என்ன சொல்றாங்க?''

""வரும் எம்.பி. தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியோடு தே.மு.தி.க.வும் சேர்ந்தால் 40 சீட்டுகளையும் ஸ்வீப் பண்ணிடலாம்ங்கிறதுதான் அவங்களோட கணக்காகவும் கனவாகவும் இருந் தது. ஆனா, தி.மு.க.வின் மூவ்வால் ப.சிதம்பரம் போன்ற தமிழக சீனியர் காங்கிரஸ் தலைவர்களே ஷாக் ஆகியிருக்காங்க. எப்படியாவது, கூட்டணி முறியாமல் பார்த்துக்கணும்னு டெல்லியில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒருத்தரையொருத்தர் சந்திக்கும்போது பேசிக்கிறாங்க. ப.சி.கூட தனக்கு வேண்டிய கட்சிக்காரங்ககிட்டே, தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் மட்டும் கூட்டணி வைத்தால் சீட் ஜெயிப்பாங்களா? காங்கிரஸ் கூட்டணி இல்லாம எம்பி. தேர்தலில் ஜெயிக்க முடியுமான்னு கேட்டிருக்காரு.''

""கட்சிக்காரங்க என்ன சொன்னாங்களாம்?''

""அப்படியொரு கூட்டணி அமைந்தால் அவங்க எத்தனை சீட்டு ஜெயிப்பாங்கன்னு சொல்ல முடியாது. ஆனா, நம்மை கூட்டணியிலிருந்து தி.மு.க. கழற்றிவிட்டால், ஒரு சீட் கூட காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்காதுன்னு ப.சி.கிட்டே சொல்லியிருக்காங்க. இந்தத் தகவலோடுதான் அவர் டெல்லியிலிருந்து குலாம்நபி ஆசாத், ஏ.கே.ஆண்ட்டணியோடு ஃப்ளைட் ஏறி சென்னைக்கு வந்திருக்காரு.''


""தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உரசல் விவகாரம் தேசிய அளவில் கவனிக்கப்படும்போது, எம்.பி. தேர்தலில் டெல்லியை குறி வைத்திருக்கும் அ.தி.மு.க சும்மா இருக்குமா?''

""சரியா கேட்டீங்க தலைவரே.. தி.மு.க. சைடில் என்ன நடக்குதுன்னு டைம் டூ டைம் ரிப்போர்ட் கேட்டு, முழுமையா கவனிக்கிறாராம் ஜெ. அதுபோல, தே.மு.தி.க.வோட மூவ் என்னன் னும் கவனிக்கச் சொல்லியிருக்காரு. அ.தி.மு.க. கூட்டணியில் நேரடியாகவோ மறைமுகமாவோ இருக்கும் ம.தி.மு.க.வும் இடதுசாரிகளும் காங் கிரசை கழற்றிவிட்டுவிட்டு தி.மு.க. வந்திடக் கூடாதுன்னும், அது நமக்கு நல்லதா இருக் காதுன்னும் நினைக்கிறாங்களாம். பிரார்த்தனைகூட நடக்குதாம்.''

""தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழலில் தே.மு.தி.க.வோட நிலை என்ன?''

""பொதுவா தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திலோ வெளியிலோ மற்றவர்களிடம் அதிகம் பேசமாட்டாங்க. அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மாதிரியே தலைமையாசிரியருக்குப் பயந்த ஹைஸ்கூல் ஸ்டூண்ட் மாதிரியே இருப்பாங்க. ஆனா, சமீபகாலமா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கட்சிப் பொறுப்பாளர்கள்கிட்டே நல்லா பேசிக்கிட்டிருக்காங்க. இந்த சந்தர்ப்பத்தில் தே.மு.தி.க. எம்.எல். ஏ.க்களை முழுசா உடைக்கணும்ங்கிற அசைன்மென்ட்டை தீவிரப்படுத்தி யிருக்கிறாராம் ஜெ.''

""வேலைகள் ஆரம்பிச் சிடிச்சா?''

""வேகம் எடுத்திடிச்சிங்க தலைவரே.. … ஏற்கனவே தே.மு.தி.க. விலிருந்து  வெளியே வந்த 5 எம்.எல்.ஏ.க்களையும் மற்ற தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு விசிட் அடிக்கும்படி அ.தி.மு.க. தலைமையிடமிருந்து உத்தரவிடப் பட்டிருக்கு. இதன்படி கோவைக்குப் போன எம்.எல்.ஏ.க்கள் சுந்தரராஜ னும் மைக்கேல் ராயப்பனும் சூலூர் எம்.எல்.ஏ. தினகரன்கிட்டே பேசி யிருக்காங்க. அதற்கப்புறம் கிணத்துக் கடவு அ.தி.மு.க எம்.எல்.ஏ.வான அமைச்சர் தாமோதரனும் தினகரன் கிட்டே பேசியிருக்காரு. கிட்டதட்ட ஒரு செட்டில்மெண்ட்டுக்கு வந்துட் டாங்களாம்.''

""அப்படின்னா, தொகுதி மக்களின் நலனுக்காக ஜெ.விடம் மனு கொடுக்கப்போகும் அடுத்த தே.மு. தி.க. எம்.எல்.ஏ. தினகரன்தானா?''

""சூலூர் எம்.எல்.ஏ. தினகரன், தே.மு.தி.க.வின் கிணத்துக்கடவு ஒன்றிய செயலாளர். ரொம்ப ஏழ்மையான குடும்பப் பின்னணி. அவரை வளைக்கும் முயற்சிகள் பற்றி தெரிந்ததும் விஜய காந்த்தே தினகரன்கிட்டே பேசியிருக்காரு. அப்ப தினகரன், தேர்தல் நேரத்தில் என் மனைவியோட நகையையெல்லாம் அடமானம் வச்சித்தான் நின்னு ஜெயிச்சேன். அதை மீட்கக் கூட முடியல. என் மனைவி கோவிச்சிக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டாங்கன்னு விஜயகாந்த்கிட்டே சொல்லி யிருக்காரு. அ.தி.மு.க. தரப்போ இன்னும் பல தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களை டார்கெட் பண்ணியிருக்கு.''

""யார் யார் இந்த லிஸ்ட் டில் இருக்காங்களாம்?''

""கெங்கவள்ளி எம்.எல்.ஏ சுபாகிட்டே அ.தி.மு.க. பக்கம் சென்ற தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பேசி, இப்ப அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பேசிட்டாராம். அவர் மேலே ஆளுந்தரப்பு நிறைய கேஸ் போட்டிருக்குது. அதெல்லாம் வாபஸாகிடும்னு மைக்கேல் ராயப்பன் உத்தரவாதம் கொடுத்து, அ.தி.மு.க. பக்கம் கொண்டு வர ஃபைனல் பண்ணிக்கிட்டிருக்காராம். இதையறிந்த  விஜயகாந்த் தரப்பு, சுபாவைத்  தொடர்புகொண்டு பேசி, வழக்குகளைக் கண்டு பயப்படவேணாம். வக்கீலுக்கு ஏற்பாடு செய்றோம்னு உத்தர வாதம் கொடுத்துக்கிட்டிருக்கு தாம். இழுப்பு லிஸ்ட்டில் அடுத்த தா இருக்கிறவர், சேந்தமங்கலம் சாந்தி. இவருக்கு ஏற்கனவே விஜயகாந்த் மீது அதிருப்தி.''

""ஏன்?''

""அ.தி.மு.க.வினரோடு சேர்ந்துகொண்டு மணல்  காண்ட்ராக்ட்டில் நிறைய சம்பாதிப்பதா கட்சிக் கூட்டத்திலேயே விஜயகாந்த் இவரைக் கண்டிச்சா ராம். அதனால் அதிருப்தியில் இருந்த சாந்தியை இப்ப அ.தி.மு.க. தரப்புத் தொடர்புகொள்வதை அறிந்ததும், பிரேமலதாவே அவர்கிட்டே பேசி, தே.மு.தி.கவி லிருந்து வெளியேறாமல் பிரேக் போட்டு வைத்திருக்கிறாராம். கட்சியின் அவைத்தலைவரும் சீனியர் அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரனோ, பார்ட்டி ஆபீசுக்கே வருவதை நிறுத்திட்டாராம்.'' 

""தன் கட்சி எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க இப்படி ரவுண்டு கட்டி அடிச்சிக்கிட்டிருக்கே.. விஜயகாந்த் எப்படி காப்பாற்றப் போறாராம்?''

""அது தெரியலீங்க தலைவரே.. ஆனா, தே.மு.தி.க.வை எப்படியாவது  காங்கிரஸ் பக்கம் கொண்டு வந்திடணும்ங்கிறதில் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் மும்முரமா இருக்காங்க. விஜயகாந்த் உறவுக்கு சொந்தமான லீ கிளப்புக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு பங்களாவில் ஜி.கே.வாசனும் விஜயகாந்த்தும் சமீபத்தில் சந்தித்துப்  பேசி யிருக்காங்க. அதுபோல, கார்த்தி சிதம்பரமும் விஜயகாந்த் மச்சான் சுதீஷோடு நல்ல தொடர்பில் இருக்கிறார். இலங்கைப் பிரச்சினை தொடர்பா தமிழகமே மத்திய அரசுக்கு எதிரா கொந்தளிச்சிக்கிட்டிருக்கிற இந்த நேரத்திலும், விஜயகாந்த்கிட்டே யிருந்து காங்கிரசுக்கு எதிரான வலுவான அட்டாக் எதுவும் வராததையும் அவர்  தரப்பு ஆட்களே சுட்டிக்காட்டுறாங்க. தி.மு.க கழட்டிவிட்டாலும் காங்கிரசும் தே.மு.தி.கவும் கூட்டணி சேர்வது என்றும் விடுதலை சிறுத்தைகள்  வந்தால் சேர்த்துக்கொள்வதுன் னும் ப்ளான் பண்ணப்பட்டிருக்காம்.'' 


""பல ப்ளான்கள் நடந் துக்கிட்டுத்தாம்ப்பா இருக்குது.… 2ஜி விவகாரத்தில், ஏ-1ஆக சேர்க்க வேண்டிய சுனில் மிட்டலை பிரதமர் அலுவலகம் தலையிட்டு காப்பாற்றிவிட்டதை போனமுறைதான் நாம பேசி னோம். இப்ப அதே  பிரதமர் மீதும் அவரது அலுவலகம் மீதும் 2ஜி தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரத்தோடு வெளியாகியிருக்கே...''

""ஆமாங்க தலைவரே... இதே 2ஜி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கிளப்பியபோது, தன்னை சந்தித்த ஆ.ராசா கிட்டே பிரதமர் மன்மோகன்சிங், உங்களை ஏ-1 என்று இவர்கள் சொன்னார்கள் என்றால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு சம்மதம் தெரிவித்த நான்தானே ஏ-2ன்னு சொன்னதையும் நம்ம நக்கீரன்தான் முதலில் வெளிப்படுத்தியது. ஆனா, 2ஜி வழக்கில் ஆ.ராசாவை மட்டும் சிக்கவைத்துவிட்டு மற்ற எல்லோரும் தப்பிச் சிட்டாங்க. 

""அப்படியும் கோர்ட்டிலும், மீடியாவிலும் தன்னோட முடிவுகள் அனைத்தும் பிரதமருக்குத் தெரியும்ங்கிறதை ஆ.ராசா திரும்பத் திரும்ப சொல்லிக் கிட்டிருந்தாரே.. இப்பவும் ஜே.பி.சியில் நேரில்  ஆஜராகி உண்மையைச்  சொல்ல வாய்ப்புக்கொடுங்கன்னுதானே ஆ.ராசா கேட்கிறாரு.''

""அவருக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுதுங் கிறதுக்கான ஆதாரங்கள் டெல்லியில் லீக்காகியிருக்குங்க தலைவரே… அதாவது, PMO file NO 180/31/C/26/OS.ESI, VOL.IV படி, முதலில் வரு பவருக்கு முன்னுரிமை கொடுத்து  ஸ்பெக்ட்ரம் ஒதுக்குவது என்ற ஆ.ராசாவின் கடிதத்திற்கு, அவசரமாக பரிசீலிக்கவும் என பிரதமர் குறிப்பு எழுதியிருப்பதும், அதனடிப்படையில், பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.         நாயரும்  செயலாளர் புலோக் சாட்டர்ஜியும் இதுபற்றி ஆலோசித்து, ஆ.ராசாவின் கடிதத்திற்கு ஒப்புதல் அளித்திருக்காங்க. அதாவது, இப்போது 2ஜி ஊழல் என்று எதெல்லாம் குறிப்பிடப்படுகிறதோ அதில் 4 அம்சங்களுக்கு பிரதமர் ஆலோசனையின்பேரில் அவரது செயலாளர்கள் ஒப்புதல் கொடுத் திருக்காங்க.''

""ஓ...''…

""அதுபோல, நார்மல் ரேட்டிலேயே ஸ்பெக்ட்ரமின் ஆரம்ப கட்டணங்களை நியமிக்கலாம்னும் பிரதமர் அலுவலகம் ஒப்புக்கொண்டிருக்குது. அதாவது, பழைய விலைக்கே ஸ்பெக்ட்ரத்தை ஆ.ராசா ஒதுக்கினார்னு அவர் மேலே சி.பி.ஐ. சார்ஜ்ஷீட் போட்டி ருக்குதோ அதற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் தந்தி ருப்பது அப்பட்டமாக வெளிப் பட்டுள்ளது. அதுபோலவே, காலக்கெடு தேதிக்கு முன் பாகவே ஸ்பெக்ட்ரம் ஒதுக் கப்பட்டதுன்னு ஆ.ராசா மேலே குற்றம்சாட்டப்பட்டிருக்கு. இந்த தேதி மாற்றத்துக்கும் பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித் திருப்பது சம்பந்தமான ஆவணமும் வெளியாகியிருக்கு. இப்படி பல விவகாரங்களிலும் பிரதமருக்கும் அவரோட அலுவலகத்திற்கும் தொடர்பு இருப்பதாலதான் ஜே.பி.சியில் ஆ.ராசாவை நேரில் சாட்சியமளிக்க மறுக்குறாங்கன்னு டெல்லியில் உள்ள தலைவர்கள் சொல்றாங்க.''

""நான் ஒரு தகவல் சொல்றேன். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களைக்  கொண்டு வர ணும்ங்கிற கலைஞரின் கோரிக்கைக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்திருப்பதை யும் ஈழப்பிரச்சினையில் இது தி.மு.க.வுக்கு சாதகமான அம்சமாக மாறி வரு கிறதுன்னும் உளவுத்துறை ரிப் போர்ட் கொடுத்ததையடுத்து, திங்கட்கிழமை யன்னைக்கு ஜெ.வும் இந்தத் திருத்தங்களை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக் கார்!''

 லாஸ்ட் புல்லட்!

தலைமைச் செயலாளர் ஷீலாபாலகிருஷ்ணன் தலைமையில் மின்சாரத் துறையின் ஆய்வுக் கூட்டம் திங்களன்று கோட்டையில் நடந்தது. இதில், அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்து அறையை விட்டு வெளியேறும் போது, ஜெயலலிதாவுக்கு வணக்கம் சொல்வது போல முனுசாமிக்கு வளைந்து வணக்கம் சொல்லிவிட்டுப் போனார் நத்தம் விஸ்வநாதன். தன் அறைக்கு வந்த நத்தத்திடம் அவரது உதவியாளர்கள், ""அவர் ஜூனியர். அவருக்குப் போய் இப்படி வளைந்து நெளிந்து வணக்கம் சொல்கிறீர்களே?'' என்று கேட்டபோது, ""எல்லாத் துறைகளின் கூட்டத்திற்கும் முனுசாமி வர்றார். காலம் கெட்டுக் கெடக்குது. எதிர்காலத்தில் எதுவேணாலும் நடக்கலாம். நமக்கு எதுக்கு வம்பு. அதான் வணக்கம் அப்படிச் சொன்னேன்'' என்றிருக்கிறார் நத்தம்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை தமிழக அரசு அறிவித்த நிலையிலும், மாணவர்களின் போராட்ட உணர்வுகள் ஓயவில்லை. இந்த நிலையில், "தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு' தமிழகம் முழுவதும் வரும் 20-ம் தேதி ஒரு கோடி மாணவர்கள் திரளும் தொடர் முழக்க போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணி இதற்காக நடந்து வருகிறது. தொடர் முழக்க போராட்டத்திற்காக 

ad

ad