புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூலை, 2013


தடையை மீறி கலந்து கொள்வது பற்றி ஆலோசனை! தடை உத்தரவை வாங்கிய பின் திருமா பேட்டி!
தருமபுரி மாவட்டத்தில் நுழைய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் உத்தரவிட்டிருந்தார்
.  மாவட்டத்தில் 144 தடை அமலில் உள்ளதால் திருமாவளவனுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தர்மபுரியில் இளவரசன் உடலுக்கு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக திருமாவலவன் கிருஷ்ணகிரி வந்தார்.
இதை தொடர்ந்து தடை உத்தரவு ஆணையை கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வள்ளி மற்றும் காவல் துறை டி.எஸ்.பி சந்தான பாண்டியன் ஆகியோர் கிருஷ்ணகிரியில் தங்கியிருந்த திருமாவளவனிடம் அளித்தனர். அதை கையெழுத்திட்டு பெற்று கொண்டார்.
இதை தொடர்ந்து திருமாவளவன் கூறியபோது, தடை உத்தரவை மீறி கலந்து கொள்வதா என்பது குறித்து கட்சியினருடன் ஆலோசனை செய்தபின், அதனை காலையில் தெரிவிப்பதாக கூறினார்.

ad

ad