தடையை மீறி கலந்து கொள்வது பற்றி ஆலோசனை! தடை உத்தரவை வாங்கிய பின் திருமா பேட்டி!
இந்த நிலையில் தர்மபுரியில் இளவரசன் உடலுக்கு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக திருமாவலவன் கிருஷ்ணகிரி வந்தார்.
இதை தொடர்ந்து தடை உத்தரவு ஆணையை கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வள்ளி மற்றும் காவல் துறை டி.எஸ்.பி சந்தான பாண்டியன் ஆகியோர் கிருஷ்ணகிரியில் தங்கியிருந்த திருமாவளவனிடம் அளித்தனர். அதை கையெழுத்திட்டு பெற்று கொண்டார்.
இதை தொடர்ந்து திருமாவளவன் கூறியபோது, தடை உத்தரவை மீறி கலந்து கொள்வதா என்பது குறித்து கட்சியினருடன் ஆலோசனை செய்தபின், அதனை காலையில் தெரிவிப்பதாக கூறினார்.