புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2013

4 திருமணம் செய்து கொண்ட மனைவியிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு, 4வது கணவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆட்சியர் சண்முகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது, இந்திரா நகர், பண்ணாரி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரபு (28), கலெக்டரிடம்
ஒரு புகார் மனு அளித்தார். அதன் விபரம் வருமாறு:

நான், இந்திரா நகர் பண்ணாரி மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வருகிறேன். கார் மெக்கானிக்காக உள்ளேன். அதே தெருவில் வசித்த சத்யா (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டேன்.
ஏற்கனவே, என் மனைவிக்கு மூன்று முறை திருமணமானதையும், அந்த மூன்று கணவர்களை எல்லாம் பிரிந்து வாழ்வதையும் மறைத்து, என்னை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார்.
இப்போது, எங்களுக்கு ரூபாஸ்ரீ என்ற ஒரு மகள் உள்ளார். வாரந்தோறும் புதுத்துணி எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்த என் மனைவியை கண்டித்ததால், என்னிடம் இருந்து இப்போது பிரிந்து சென்று விட்டார்.  தற்போது, ஒரு மில் உரிமையாளரின் பாதுகாப்பில், என் மனைவியும், மகளும் உள்ளனர்.
என்னை, ஈரோட்டை விட்டு வெளியூருக்கு சென்றுவிட வேண்டும் என்றும்,  இல்லையெனில் என்னை கொன்றுவிடுவதாகவும், என் மனைவியும், அவருடன் இருப்பவர்கள் மற்றும் மாமியார் கமலாவும் மிரட்டி வருகின்றனர். என் மாமியாரின் வீட்டில் நான் இருந்த போது, என் பள்ளி சான்றிதழையும், வாக்காளர் அட்டை ஆகியவற்றையும் வாங்கி எரித்துவிட்டனர்.
இதுகுறித்து சூரம்பட்டி மற்றும் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈரோட்டில் பாதுகாப்பாக வாழ முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. என்னை மிரட்டியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 

ad

ad