புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2013

சென்னையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர் சிறையிலடைப்பு
மாநில கல்லூரியில் மாணவர் பேரவைக்கான நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. வெற்றி பெற்ற நிர்வாகி களின் ஆதரவு மாணவர்கள் சுமார் 100 பேர் கடற்கரை காமராஜர் சாலையில் பாட்டுப்பாடி ஆட்டம் போட் டனர்.



அப்போது அந்த வழியாக வந்த 6டி மாநகர பஸ்சை வழி மறித்தனர். சில மாணவர்கள் பஸ்சின் கூரையின் மேல் ஏறி நடனம் ஆடினார்கள். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் போலீசார் அங்கு வந்து மாணவர்களை பஸ்சின் கூரையை விட்டு கீழே இறங்க சொன்னார்கள். ஆனால் மாணவர்கள் மறுத்தனர். முத்துசாமி பாலம் அருகே செல்லும் போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் சரவணன், யுவராஜ் ஆகிய இரண்டு போலீசார் காயம் அடைந்தனர்.
நிலைமை மோசமானதால் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் மாணவர்கள் சிதறி ஓடினார்கள்.  காயம் அடைந்த 2 போலீசாரும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். இதில் சரவணன் மேல்சிகிச் சைக்காக தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பூக்கடை உதவி கமிஷனர் குமார், இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாநில கல்லூரியை சேர்ந்த 3ஆம் ஆண்டு மாணவர் ராம்குமார், முதலாமாண்டு மாணவர் சரவணன், முன்னாள் மாணவர்கள் கார்த்திக், சுந்தரமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர்.
கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல், அனுமதியின்றி கும்பலாக கூடுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜாமீனில் வரமுடியாத அளவுக்கு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதான 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 

ad

ad