புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2013

வடமராட்சிப் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக வெளியான செய்தி பொய் என்கிறார் இராணுவப் பேச்சாளர்
யாழ்.வட­ம­ராட்­சியில் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் இருந்து அண்­மையில் விடு­விக்­கப்­பட்ட பல்­லப்பை பகுதி கிணறொன்­றி­லி­ருந்து 17 மனித எச்­சங்கள் மீட்­கப்­பட்­ட­தாக வெளி­யான செய்­தி­களில் எவ்வித உண்­மையும் இல்லை என்று இரா­ணுவ பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய தெரி­வித்தார்.
பல்­லப்பை பிர­தே­சத்தில் சுத்­தி­க­ரிப்பு பணியின் போது 17 மனித எச்­சங்கள் மீட்­கப்­பட்­ட­தாக இணை­யத்­த­ளங்­களில் வெளி­யான செய்தி தொடர்­பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
சர்­வ­தேச இணை­யத்­த­ளங்கள் ஊடாக இந்­நாட்­களில் இலங்கை தொடர்­பான மிகவும் தவ­றான புனை­யப்­பட்ட பல கட்­டுக்­க­தைகள் பரப்­பப்­பட்டு வரு­கின்­றன. இவை இலங்­கையின் பெய­ருக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்த முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டாகும்.
பல்­லப்பை என்ற பகு­தியில் அவ்­வா­றான எந்­த­வொரு சம்­ப­வமும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கோ பொலி­ஸா­ருக்கோ இது­வரை பதிவாகவில்லை. பல்­லப்பை பிர­தேச மக்­க­ளுக்குக் கூட அப்­ப­டி­யொரு சம்­பவம் இருப்பது தெரி­யாது.
இது தொடர்பில் நாமும் எமது அதி­கா­ரி­களை ஸ்தலத்­துக்கு அனுப்பி ஆராய்ந்தோம். எனினும் அங்கு அப்­படி எதுவும் பதி­வா­க­வில்லை என தெரி­வித்தார்.
யாழ்.வட­ம­ராட்சி, பல்­லப்பை பகுதி கிண­றொன்­றி­லி­ருந்து 17 மனித எச்­சங்கள் அங்கு சுத்­தி­க­ரிப்பு பணியில் ஈடு­பட்ட பொது­மக்­க­ளினால் மீட்­கப்­பட்­ட­தா­கவும், இந்­நி­லையில் அங்கு சுத்­தி­க­ரிப்பு பணி­களை தொடர வேண்டாம் என இரா­ணுவம் பொது­மக்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டி­ருந்­த­தா­கவும் செய்தி வெளியாகியிருந்தது.
தொடர்புடைய செய்தி

ad

ad