புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2013

கச்சதீவுக்கு சென்று இந்தியக் கொடி ஏற்றப் போவதாகக் கூறி புறப்பட்ட 69 பேர் கைது 
கச்சதீவை மீட்கக் கோரியும், அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றப் போவதாகவும் அறிவித்து விட்டு, கச்சதீவுக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்ட கே.சி.திருமாறன் உள்ளிட்ட 69 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இதையடுத்து தேவர் தேசியப் பேரவையின் தலைவர் கே.சி.திருமாறன் தலைமையில் அரசரடியில் உள்ள மூக்கையாத் தேவர் சிலை முன்பு நேற்று வியாழக்கிழமை கூடினர்.
சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள் கச்சதீவுக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டனர்.
தகவலறிந்த பொலிஸார் அங்கு விரைந்து வந்து கே.சி.திருமாறன் உள்ளிட்ட 69 பேரையும் கைது செய்தனர்.
அவர்களை திருமண மண்டபத்தில் தங்கவைத்த பின்னர் மாலையில் விடுவித்தாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

ad

ad