புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2013




         ""ஹலோ தலைவரே... 46 நாள் கழித்து கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பியிருக்கிறார் ஜெ.''

""எங்கே இருந்தாலும் அரசுப் பணிகள் தொய்வின்றி நடந்ததுன்னும், கொடநாடு என்ன லண்டனிலா இருக்குது. தமிழ்நாட்டில்தானே இருக்குதுன் னும், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் பணிகள் எதுவும் தடைபடாதுன்னும் கலைஞருக்கு பதில் nakeeranசொல்லி காரசாரமா ஜெ. ஒரு அறிக்கை கொடுத்திருந்ததைப் படிச்சேம்ப்பா... ஆகஸ்ட் 15, சுதந்திரதினம். தொழில்நுட்பவசதியோடு கொடியேற்றும் வாய்ப்பு இன்னும் உருவாகலை. கோட்டையில் ஜெ. நேரடியாத்தான் கொடியேற்றப் போகிறார்.''

""கொடநாட்டில் அரசுப் பணிகளை கவனிச்சபடியே, உடல்நலனுக்கான மருத்துவத்தையும் ஜெ. எடுத்துக்கிட்டாராம். அதனாலதான் யாருக்கும் அங்கே அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்படலை. வேலூரிலும் சேலத்திலும் நடந்த படுகொலைகளால் ஏற்பட்ட டென்ஷனையடுத்து, தலைமைச் செயலாளரும் டி.ஜி.பி.யும்தான் சட்டம்-ஒழுங்கு பற்றி நேரில் பேசணும்னு ஜெ.கிட்டே அப்பாயின்ட்மென்ட் கேட்டாங்க. அந்த ஒரு மீட்டிங்கிற்கான அப்பாயின்ட் மென்ட் மட்டும்தான் கொடுக்கப்பட்டது. எந்தத் தொந்தரவும் இல்லாமல் பணிகளை கவனிக்கத்தான் கொடநாடு வந்தேன். இங்கேயும் டிஸ்டர் பன்ஸ் வேண்டாம்னு உயரதிகாரிகளிடம் ஜெ. சொன்னாராம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். டிரான்ஸ்பர், போஸ்டிங் விஷயங்களைக்கூட யாரிடமும் ஆலோசிக்காமல் ஜெ.வே ஃபைனல் பண்ணிட்டாருன்னு கோட்டை வட்டாரத்தில் சொல்றாங்க.'' 

""கொடநாட்டில் ஜெ. இருந்தப்ப, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் கடைசிகட்ட வாதம் தொடங்கிடிச்சே.''…


""அந்த ஒரு வழக்குதான் ஜெ.வின் அரசியல் எதிர்காலத்துக்கு சிக்கலை உண்டாக்குற வழக்கு. அதனால அவரே அதில் கவனம் செலுத்தினாரு. ஃபைனல் வாதங்கள் தொடங்கிய சமயத்தில் தி.மு.க தரப்பில் வக்கீல் கள் ஆஜராகி, சாட்சியங்களோட காப்பிகள் தங்களுக்கு வேணும்னு மனு தாக்கல் செய்த தால் வழக்கு இன்னும் பரபரப்பானது. இந்த காப்பிகள் 10ஆயிரம் பக்கங்களுக்கு மேல் வரும். இதற்கிடையில், கோர்ட்டில் ஜெ. தரப்பின் வாதங்கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் நிலையில், திங்கட்கிழமையன்னைக்கு ராகுகால நேரத்தில் வாதத்தைத் தொடரவேண்டாம் என ஜெ. தரப்பு முடிவு செய்து, சசிகலா தரப்பிலான வாதங்கள் வைக்கப்பட்டது. ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் விஷயங்களை இந்த வழக்கில் கொண்டு வரக்கூடாதுங்கிறது தான் அவங்க வாதம். ஜெ. தரப்பு வாதம் மறுபடியும் தொடரும்.'' 

""இன்னும் சுதாகரன், இளவரசி தரப்பு வாதங்கள் இருக்குதே.''…


""ஆமாங்க தலைவரே.. அதெல்லாம் முடிந்து 16-ந் தேதி பி.பி. வாதாடுவாரு.  வழக்கு தனக்கு சாதகமா முடியும்ங்கிற நம்பிக்கை ஜெ.விடம் அதிகரிச் சிருக்குதாம். அதே நேரத்தில், இந்த வழக்கை கூர்ந்து கவனிச்சிக்கிட்டிருக்கிறவங்க, ஒரு விஷயத்தை சொல்றாங்க.'' 

""என்ன விஷயம்?''


""வழக்கின் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. சம்பந்தம். ஒரு வருடத்துக்கு முன்னாடி பி.பி.க்கு பின்னால் நின்று வழக்கிற்கு உதவியா இருந்தவர். திடீர்னு ஒரு பெட்டிஷனை சம்பந்தம் தாக்கல் செய்தார். வழக்கை மறுவிசாரணை செய்யணும்னு பெட்டிஷனில் சொல் லப்பட்டிருந்தது. அவரோட இந்த பெட்டிஷன் தவறான அணுகுமுறைன்னு சொன்ன கோர்ட், அவரை மன்னிச்சி விடுவதாகவும்  சொன்னது. அவர் சமீபத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெ. தரப்பு சாட்சியாக சாட்சியமளித்திருக்கிறார். ஜெ. கையில்தான் ஆட்சியதிகாரம் இருக்கிறது. அவர்தான் போலீஸ் துறைக்கும் மந்திரி யாக இருக்கிறார். அப்படிப் பட்ட நிலையில், விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி., குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவா சாட்சியம் சொல்லி யிருக்கிறார்ங்கிற விவரத்தை மேல் கோர்ட்டுக்குக் கொண்டு போனால் வழக்கின் போக்கில் பல திருப்பங்கள் ஏற்படும்னு சட்ட வல்லுநர்கள் சொல்றாங்க.''

""சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் எத்தனை திருப்பங்களோ! கொடநாட்டிலிருந்து ஜெ. ரிட்டன் ஆனதும் அமைச்சரவை மாற்றம், மா.செ.க்கள் மாற்றம்னு நிறைய அதிரடிகள் இருக்கும்னு சொல்லப்பட்டதே?''


""திங்கட்கிழமையன்னைக்கு ஜெ. ரிட்டன் ஆனதுமே அந்த எதிர்பார்ப்பு கூடிடிச்சி. லிஸ்ட்டும் ரெடியாயிடிச்சாம். அதனால் எந்த நேரத்திலும் ஆக்ஷன் இருக்கலாம்ங்கிற பயம் மந்திரிகளிடமும் மா.செக்களிடமும் இருக்குது. ஜூனியர் மந்திரிகள் பலரும் ஓ.பி.எஸ்.கிட்டே, அண்ணே… என் பெயர் ஹிட் லிஸ்ட்டில் இருக்குதான்னு கேட்க, எனக்குத் தெரி யலை.. என் தலையே உருளும்னு நினைக் கிறேன்னு பதட்டத்தோடு  சொல்லி யிருக்காரு.''

""ஓ.பி.எஸ்.ஸுக்கே நெருக்கடின்னு தொடர்ந்து தகவல்கள் வருதே..'' 


""ஜெ.வின் கோபத்துக்கு பல முறை ஆளாகிட்டாரு ஓ.பி.எஸ். இப்ப லேட் டஸ்ட் மேட்டர் என்னன்னா, வடமாவட்டங்களில் செல்வாக்கா இருக்கிற ஒரு கட்சியின் எம்.எல்.ஏ., ஆளுங்கட்சி பக்கம் வருவதற்கு ரெடியாகி, ஜெ.வின் கொடநாடு விசிட்டுக்கு முன்பாக கார்டனிலும் அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டாரு. இவர் கட்சித் தாவுவது பற்றி ஏற்கனவே ஓ.பி.எஸ்.கிட்டேயும் பேசி யிருந்தாரு. ஆனா, அப்பாயின்ட்மென்ட் வாங்குனது ஓ.பி.எஸ்.ஸுக்குத் தெரியாது. தனக்கு கார்டனில் அப்பாயின்ட்மென்ட் கிடைச்ச விஷயத்தை ஓ.பி.எஸ்.கிட்டே எம்.எல்.ஏ சொல்ல, "அப்படியா, எனக்குத் தெரியாமல் எந்த அப்பாயின்ட்மென்ட்டும் க்ளியர் ஆகாது. உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் ஆகலை'ன்னு ஓ.பி.எஸ். சொல்லிட்டாராம். அந்த எம்.எல்.ஏ.வும் எதற்கு பெரிய இடத்து பொல்லாப்புன்னு கார்டனுக்குப் போகாமல் இருந்துட்டாரு. வர்றேன்னு சொன்ன எம்.எல்.ஏ. ஏன் வரலைன்னு ஜெ. பிறகு விசாரிச்சப்பதான் ஓ.பி.எஸ் தலையீடு பற்றி தெரிய வந்திருக்குது. செம கடுப்பாயிட்டாராம். அதனாலதான் மந்திரிசபை மாற்றத்தில், தன் தலையும் உருளலாம்னு ஓ.பி.எஸ்.ஸே பயப்படு றாரு.''

""ஆளுந்தரப்பு நியூஸாகவே இருக்குதே.. தி.மு.க தரப்பில் என்ன நடக்குது?''


""நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துக்கிட்டிருக்கிற சூழலில், லோக்சபாவிலேயே தயாநிதி மாறனை சோனியா காந்தி கூப்பிட்டு, தன்னோட அறையில் ஒரு நிமிடம் பேசியிருக்கிறார். தயாநிதியும் அடிக்கடி சோனியாவை சந்திக்கிறாராம். இதனால, எம்.பி. தேர்தலில் காங்கிரசுடன்தான் தி.மு.க கூட்டணி அமைக்கும்ங்கிற எண்ணம் எம்.பி.க்கள்கிட்டே உருவாகியிருக்குது. தயாநிதியும் சோனியாகிட்டே இதற்கான உத்தரவாதத்தைக் கொடுத்திருக்காராம். 16-ந் தேதி அறிவாலயத்தில் மா.செ.க்கள் கூட்டம் நடக்குது. எம்.பி. தேர்தல் பற்றித்தான் இதில் ஆலோசிக்கிறாங்க. அப்ப கூட்டணி தொடர்பா தங்களோட கருத்துகளை வெளிப்படையா சொல்ல ணும்னு மா.செ.க்கள் பலரும் ரெடியாகிக் கிட்டிருக்காங்க.''


""இப்ப ஹாட்டா பேசிக்கிட்டிருக்கிற ஒரு மேட்டரை நான் சொல்றேன்.. நயன்தாரா வுடனான காதல் முறிந்தபிறகு சிம்பு பற்றி பரபரப்புத் தகவல்கள் எதுவுமில்லாமல் இருந்தது. சமீபகாலமா சிம்பு-ஹன்சிகா லவ் மேட்டர் தீயா பரவியது. இதை இருதரப்புமே ஒப்புக்கொண்டதோடு, அவங்க குடும்பத்தி லிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்தது. இப்படிப் பட்ட நிலையில்தான், ஸ்டார் ஓட்டல் பார்ட்டி ஒன்றில் சிம்புவும் ஹன்சிகாவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட படங்கள், ஹன்சிகாவின் ஃபேஸ்புக்கில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருக்குது. இதுதான் இப்ப ஹாட் டாபிக். இவர்களின் காதலுக்கு ஆதரவாகவும், எச்சரிக்கையா இருக்கணும்னும், எதிர்ப்பு தெரிவித்தும் பலவிதமான கமெண்ட்டுகள் குவிஞ்சிக்கிட்டிருக்குது.''

ad

ad