புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2013

கமரொனின் காலக்கெடுவுக்குள் எதையும் செய்ய முடியாது – சிறிலங்கா அதிபர் ஆவேசம்

பிரித்தானியா கோருவது போன்று எந்தவொரு காலக்கெடுவுக்குள்ளேயும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த முடியாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

கொழும்பில், நேற்று கொமன்வெல்த் மாநாட்டின் நிறைவாக நடத்தப்பட்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா மற்றும் தென்னாபிரிக்க அதிபர், மலேசியப் பிரதமர் உள்ளிட்ட நான்கு நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து மகிந்த ராஜபக்ச இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

அங்கு கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர்,
சிறிலங்கா படைகளால் இழைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் விசாரிக்க வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் காலக்கெடுவொன்றை விதித்துள்ளார்.

அந்தக் காலக்கெடுக்குள் அதை நடத்த முடியாது.  ஒருவர் வந்து இத்தகைய கோரிக்கையை வைக்க முடியாது.

எவர் மீதாவது குற்றம் காணப்பட்டால், அவர் யாராக இருந்தாலும், அதை சிறிலங்கா சட்டங்களின் கீழேயே அணுக வேண்டும்.

தேவையான விசாரணைகளை முன்னெடுக்க சிறிலங்காவுக்கு ஒரு அரசியலமைப்பு. சட்ட வரையறைகள், அவற்றை கையாள்வதற்குப் பொருத்தமான ஆளனி எல்லாமே இருக்கிறது.

30 ஆண்டுகாலப் போர்க்குறித்து விசாரிப்பதற்கு காலம் தேவை.  நான்கு மாதங்களுக்கள் இதை முடிக்குமாறு எவரேனும் கோருவதில் நியாயமில்லை.

நல்லிணக்கம் என்பது. தனியே அதிபருக்கானது மட்டுமல்ல. எல்லாப் பங்காளர்களுக்கும் அதில் பொறுப்புள்ளது.

நல்லிணக்கத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் ஒரே இரவில் முடிவடையக் கூடியவையல்ல.

இது 30 ஆண்டுகால மோதல். இதில் தமிழர்கள் மட்டுமன்றி, சிங்களவர்கள், முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களையெல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டியது எனது பொறுப்பு.
ஆனால் நீங்கள் ஒரு வாரமோ, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள்ளோ இதைச் செய்யும்படி கூறமுடியாது. அது நியாயமற்றது.

இதற்குத் தீர்வு காண்பதற்கு எவரும் காலவரையறைகளை விதிக்க முடியாது. காயங்களை ஆற்றுவதற்கு காலம் எடுக்கும்.

வடக்கிலுள்ள மக்களின் மனங்களை மீளமைக்க வேண்டிய தேவை உள்ளது.

வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் கிழக்கிலும் உள்ள மக்களின் மனோநிலையை மெதுவாக கட்டியெழுப்பி வருகிறோம்.

பிரித்தானிய பிரதமரின் காலக்கெடுவுக்குள் சிறிலங்காவினால் எதையும் செய்ய முடியாது.

எங்களுக்கு நியாயமாக இருங்கள். எமக்கு உதவுங்கள். ஆனால் எவரும் எமக்கு உத்தரவிட முடியாது.

நீங்கள் எமது நியாயமான கருத்துகளை மதிக்க வேண்டும். சமூகங்களை பிளவுபடுத்த முனையக்கூடாது.

நாம் கொமன்வெல்த் பண்புகளை மதிக்கிறோம். வடக்கில் தேர்தலை நடத்தியுள்ளோம்.

ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்துள்ளோம். ஒரு தீர்வைத் தருமாறு மக்களிடம் கேட்டுள்ளோம்.

ஒருவரால் இதைச் செய்ய முடியாது. என்னால் இதைச் செய்ய முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad