புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2013

இசைப்பிரியா படுகொலை: அனைத்துலக விசாரணை கோரும் ரொறன்ரோ குடும்பம் – கனேடிய ஊடகம்

சிறிலங்காப் படையினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது தொடர்பான காணொலி வெளியான பின்னர், ரொறன்ரோவில் உள்ள அவரது உறவினர்களின் குடும்பம், அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதாக, கனடாவில் இருந்து வெளியாகும் நசனல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

சோபனா சோபா(இசைப்பிரியா) 2009 மே 19ம் நாள் சிறிலங்காப் படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டதை காட்டுகிறது அந்தக் காணொலி.

அதுநாள் அதற்குப் பின்னர் எடுக்கப்பட்ட படங்களில் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில், ஆடைகளின்றித் தரையில் அவரது சடலம் கிடப்பதைக் காணமுடிகிறது.

சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இந்தக் காணொலியைப் பார்த்த பின்னர், ரொறன்ரோவில் தாதியாகப் பணியாற்றும் சோபாவின் தாயின் சகோதரியான ரஞ்சினி ரவி, “அவள் படுகொலை செய்யப்பட்டுள்ளாள் என்பது நூறு வீதம் சரியானது.” என்றும், “இதுபற்றி அனைத்துலக விசாரணை தேவை” என்றும் கூறினார்.
சோபா பிடிபட்டது பற்றிய காணாலி ஒரு நாடகம் என்றும், கொமன்வெல்த் மாநாடு நடக்கவுள்ள நிலையில், அரசாங்கத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டது என்றும் சிறலங்கா இராணுவப் பேச்சாளர் பிபிசிக்கு கூறியிருந்தார்.

“அது நாடகமல்ல” என்று மறுக்கிறார் ரஞ்சினி ரவி.

ஸ்காபரோவில் உள்ள குடியிருப்பில் அவர், சோபாவின் குடும்பப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரது சகோதரி, பேர்த்தி, தாயின் இரண்டு சகோதரிகள் எல்லோரும் கனடாவில் வசிக்கின்றனர்.

"அவள் மிகவும் அழகாக இருந்தாள்.ஐந்து சகோதரிகளில் ஒருவராக சோபனா யாழ்ப்பாணத்தில் பிறந்தாள். அவள் நன்றாகப் பாடுவாள், நடனமாடுவாள்.

இதயக் கோளாறு இருந்ததால் எப்போதும் சோர்வாகவே இருப்பாள்” என்றும் அவர் சோபாவை நினைவுகூர்ந்தார் ரஞ்சினி ரவி.

ad

ad