புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2013



சோனியா, ராஜ்நாத் சிங்குக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பியுள்ள 18 நிபந்தனை விபரம்!
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இந்த ஆதரவை ஏற்பது பற்றி முடிவு செய்வதற்கு முன்பாக, தனது பிரச்சாரத்தின்போது முன்வைத்த வாக்குறுதிகள்
மற்றும் டெல்லியின் தான் எழுப்பிய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக காங்கிரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில் எழுப்பியுள்ள 18 பிரச்சனைகள் வருமாறு:
1. டெல்லியில் மிக முக்கிய பிரமுகர்களுக்கான (வி.ஐ.பி.) கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருதல். எம்.எல்.ஏ., மந்திரி அல்லது டெல்லி அதிகாரிகள் கார்களில் சிவப்பு சுழல் விளக்குக்கு தடை. அவர்கள் பெரிய அரசு பங்களாக்களில் வசிக்க தடை. சிறப்பு பாதுகாப்பு கூடாது.
2. ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றுதல்.
3. ஒவ்வொரு பகுதியிலும், காலனியிலும் மக்கள் சபைகளில் நேரடியாக முடிவுகளை எடுத்தல்.
4. டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து. டெல்லி பெருநகர் வளர்ச்சி குழுமம், போலீஸ் ஆகியவை மத்திய அரசின் பிடியில் இருந்து விடுபடுதல்.

5. டெல்லியில் உள்ள அனைத்து மின்சார வினியோக கம்பெனிகளிலும் சிறப்பு தணிக்கை. மறுக்கிற கம்பெனிகளின் உரிமங்கள் ரத்து.

6. மின் மீட்டர்களை சோதித்தல்.

7. ஒவ்வொருவருக்கும் தினமும் 220 லிட்டர் குடிநீர்.

8. அதிகாரப்பூர்வமற்ற குடியிருப்புகளை ஒழுங்குபடுத்துதல்.

9. குடிசைகளில் வசிப்பவர்களுக்கு குறைவான விலையில் முறையான வீடுகள் கட்டித்தருதல்.

10. ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறவர்களுக்கு முறையான வேலை.

11. சாதாரண வியாபாரிக்கும் சாலைகள், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்.

12. சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு கூடாது

13. டெல்லி விவசாயிகளுக்கு வசதிகள், மானியங்கள்

14. 500 அரசு பள்ளிகள் தொடங்குதல். தனியார் பள்ளிகளுக்கு நன்கொடை நிறுத்தம். கல்வி கட்டணத்தில் ஒளிவுமறைவின்மை.

15. நல்ல வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனைகள்

16. பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு படைகள். பாலியல் தொல்லை வழக்குகளில் 3 மாதத்தில் முடிவு.

17. எல்லா வழக்குகளிலும் 6 மாதத்தில் தீர்வு காண கோர்ட்டுகள் அமைத்தல், நீதிபதிகள் நியமித்தல்.

18. இந்த திட்டங்களை நிறைவேற்ற டெல்லி மாநகராட்சிகளின் ஆதரவு.
மேற்கண்ட திட்டங்கள் பற்றி சோனியா காந்தி, ராஜ்நாத் சிங் ஆகியோர் தங்கள் கட்சிகளின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுள்ளார்.

ad

ad