புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2013

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் இடம்பெற்ற பரபரப்பான இரண்டாவது இருபது-20 போட்டியில், இலங்கை அணி அபார வெற்றி பெற்றதோடு தொடர் 1-1 என சமநிலையானது.
 
ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் 2 இரு­பது-20, 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன.
 
டுபாயில் இடம்பெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றது. இந்நிலையில் இன்று இடம்பெற்ற தீர்க்கமான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
 
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
 
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 211 ஓட்டங்களை பெற்றது.
 
ஆரம்ப வீரர்களாக இறங்கி துடுப்பாட்டத்தில் அசத்திய டில்சான 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரைசத்தை தவற விட்டதோடு குசல் ஜனித் பெரேரா 84 ஓட்டங்களை அதிரடியாக பெற்றார்.
 
இதனையடுத்து வந்த சீக்குகே பிரசன்ன 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து களம் புகுந்த குமார் சங்கக்கார அபாரமாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களை பெற்றார்.
 
பாகிஸ்தான் அணியில் சயிட் அஜ்மால் இரு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
இதனையடுத்து பாரிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி அதிரடியில் மிரட்டிய போதும் இலங்கை அணியினரின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் வெற்றி இலக்கை அடைய முடியாமல் 19.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
 
துடுப்பாட்டத்தில் சராஜில் கான் 50, அப்ரிடி 28, இறுதிவரை போராடிய சுஹைல் தன்வீர் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
இலங்கை அணியின் பந்து வீச்சில் சச்சிந்தர சேனாநாயக்க 3 சீக்குகே பிரசன், திசர பெரேரா ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
இப்போட்டியின் ஆட்டநாயகனாக குசல் ஜனித் பெரேராவும், தொடரின் ஆட்டநாயகனாக சயிட் அப்ரிடியும் தெரிவு செய்யப்பட்டனர்.

ad

ad