புதன், மார்ச் 06, 2013


இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஊடகங்களை அணுகிய முறை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு பணிப்புரை விடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபைக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையிலான கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் 3ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

ராஜபக்சேதான் முள்ளிவாய்க்காலை அழிக்கும்படி உத்தரவிட்டார் - ஜெய சூர்யா

முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக் கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான்

'வெள்ளை வேனும் அரசுதான்.. கடத்தியதும் அரசுதான்...


வடக்கு - கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரி வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோரின் உறவுகளால் வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.காணாமல் போனவர்களின் உறவுகள் ஒன்றுகூடி தமது சோகங்களை வெளிப்படுத்தவிருந்த ஜனநாயக ரீதியிலான போராட்ட நிகழ்வை அரசாங்கம் தடுத்து நிறுத்தியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
சுதந்திரத்திற்கான அரங்கு மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமையில் காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை


யாழ்ப்பாணம், சங்கானை பகுதியில் தூக்கில் தொங்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு தற்கொலை செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து பொலிஸார் குறித்த சடலத்தை இன்று புதன்கிழமை காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.


சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் கடற்படையினருக்கு தொடர்பு


சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் கடற்படையினருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையைச்


ஜனாதிபதி ராஜபக்ஷவை கண்டித்து ஆர்ப்பாட்டம் : ஒருவர் தீக்குளிக்க முயற்சி

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டித்தும்

தலிபான்களால் சிறைபிடிக்கப்பட்ட 17 ஆப்கானிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் தலை தூக்கியுள்ளதோடு அரசுப் படையினருக்கு எதிராக திடீர் தாக்குதலில் ஈடுபட்டு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

ரொறன்ரோவில் இலங்கை தூதரகம் நோக்கிய கண்டனப் பேரணி! பெருந்திரளான மக்கள் பங்கேற்பு
பாலச்சந்திரன் படுகொலையினை கண்டித்தும் சிங்களப் படையின் இன அழிப்பு, பாலியல் வல்லுறவு ஆகியவற்றை கண்டித்து மகிந்த ராஜபக்சவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக்கோரி கடந்த திங்களன்று கனடா ரொறன்ரோவில் உள்ள  இலங்கைத் தூதரகம் நோக்கிய கண்டனப் பேரணி நடைபெற்றது.
மரண அறிவித்தலும் கண்ணீர் அஞ்சலியும்
                       திரு நல்லதம்பி இராசதுரை                                                                                 புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிறந்த சமூக சேவையாளரும் மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய முன்னாள் அதிபருமாகிய  நல்லதம்பி இராசதுரை அவர்கள்  05.03.2013 செவ்வாயன்று புங்குடுதீவில் இறைவனடி சேர்ந்தார்  என்பதனை ஆழ்ந்த கவலையுடன்  தெரிவித்துக்கொள்கிறோம் .புங்குடுதீவு 7 ஆம் வட்டாரம் ஊரதீவில் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை
ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் கற்ற பின்னர் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியை கற்று தேறினார். தனில் மொழியிலும் கணத்திலும் சிறந்த தகுதியைப் பெற்ற இந்த திருமகன் ஊரதீவு இலம்தமிழர் மன்றத்தை எஸ்.கே.மகேந்திரன் அவர்கள் அராம்பித்த பொது அவரோடு வலது கையாக நின்று வளர்த்தெடுத்து வர அறிய பணிகளை மேற்கொண்டவர். அதே கால பகுதியி ல் கிராம முன்னேற்றசங்க நிர்வாகத்தில் பல பதவிகளையும் வகித்து கிராம நலனுக்கு உறுதுணையாக இருந்தார் . பின்வந்த காலங்களில் ஊரதீவு சனசமூக நிலையத்தின் வளர்ச்சியிலும் தோள்  கொடுத்தார் .  உயர்கல்வியை முடித்த பின்னர் தொழில் தேடி நீண்ட காலம் காத்திருந்த இயற் அந்த காலப்பகுதியில் தனது கிராம  இளைஞர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு இலவசமாகவும் பின்னர் மிக குறைந்த கட்டணத்திலும் மாலி இரவு நேரா வகுப்புகளை நடத்தி பேருதவி புரிந்தவர் . வயது வித்தியாசம் பார்க்காது இனிமையாக எளிமையாக எல்லோருடனும் பழகி நகைச்சுவையாக ஒன்றுகூடி பேசி எல்லோர் மனதிலும் இலகுவாக இடம்பிடித்த ஒரு அற்புத மனிதர் . ஒரு காலத்தில் அறிவகமே தஞ்சமென கிடநது சேவை செய்த கோலத்தை என் இரு கண்களாலும் பார்த்து வியந்திருக்கிறேன் . சகதோழன் எஸ் கே யின் வழியைப் பின்பற்றி தமிழரசுக் கட்சியின் பால் ஈடுபாடு காட்டி அரசியலிலும் பிரகாசித்தவர் . புங்குடுதீவு பணாவிடை  சிவன் கோவில்  வளர்ச்சியில்     கணிசமான பங்கு     இவருக்குண்டு . அந்த ஆலயத்தின்   பரிபாலன சபையில்    பல்வேறு பதவிகளை அலங்கரித்து  ஆலயத்தின் மேம்பாடுக்கு உழைத்தவர்
நீண்ட கால முயற்சியின் பின்னர்  இவருக்கு கிடைத்த ஆசிரிய தொழிலை கூட திறம்பட புரிந்து இறுதி காலங்களில் அதிபராக உயர்ந்து ஒய்வு பெற்றார் .ஆசிரியராக முரசுமோட்டை மகா வித்தியாலயத்தில் பணி  ஆற்றிய பின்னர் புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை  வித்தியாலயத்துக்கு மாற்றாலாகி வந்தமை இவரது ஊருக்கான சேவைக்கு வித்திட்டது .ஆசிரியாராக பொறுப்பேற்ற இவர் பின்னர் இவரது சேவைக்கேற்ப உப அதிபராகி அதிபராகி உயர்ந்து கொண்டார் . இவர் அதிபராக இருந்த காலத்தில் கமலாம்பிகை மகா வித்தியாலயம் பாரி முன்னேற்றம் கண்டது .கல்வி தராதரம் ,விளை யாட்டு விழாக்கள் ,பாடசாலை அபிவிருத்தி, பழைய மாணவர்சங்கம் ,வெளிநாட்டு மக்களின் உதவி பெறல் என பல்வேறு வகையில் இவர் ஊக்கம் அளித்தார் போர்க்களத்தின் பின்னர் இந்த பாடசாலை இப்போதிருக்கும் உயர்ந்த நிலைக்கு இவரது முயற்சியும் பங்களித்து   முடியாது . இவர் கலை துறையில்  ஆற்றிய ஈடுபாடும் ஊக்குவித்தலும் புங்குடு தீவு மக்களின் மனதில் என்றும் அழியாது .ஊரதீவு இளம்தமிழர் மன்றம் எழுபதுகளில் சிவராத்திரி விழாக்கள், அரசியல் நிகழ்வுகள் , விளையாட்டு விழாக்கள்,கலை நிகழ்ச்சிகள்  என பலவற்றை  நிகழ்த்தி சாதித்தது .அந்த வேளையில் எல்லாம் கிராம இளைஞர்களை திரட்டி ஏராளமான நாடகங்களை எழுதி தானே இயக்கி அற்புதமாக மேடையேற்றி புகழ் பெற்று இருந்தார் ,   நல்ல தலை சிறந்த நடிகர்கள் எழுத்தாளர்கள் பேச்சாளர்களை உருவாக்க வித்திட்ட தமிழ் பற்றாளன் .இவரது கையால் குட்டுப்பட்டு உருவானவர்கள் வரிசை    சிவானந்தன் கருணா நிதி,த.குணரத்தினம் க.ஸ்ரீ ஸ்கந்தராசா( சித்ரா மணாளன் ) .காந்தி,குலேந்திரன் ,ஜெயபாலன் சசிகாந்தன்,ஆனந்தன் , மோகனதாஸ் ,நிமலன்,தி.ஸ்ரீஸ்கந்தராசா ஆ.கைலாயநாதன்,எ,கைலாசநாதன்,சோ.கைலைவாசன் ,க.செல்வானந்தன்  என நீண்டு செல்லும்  . எனக்காக   இரு விழிகள் ,என்ரை ஆத்தே ஆகிய நாடகங்கள் இவரது படைப்பில் என்னை இளமைக் காலத்தில் கவர்ந்திருந்தன .வயது போன மூதாட்டியாக ஒரு பாத்திரத்தில் நடித்து கூட மெருகேற்றி இருந்தார்  இவரது ஒரு கரம் சற்றே பலவீனமானதாக இருந்தமையை கூச்ச படாமல் குறித்து  காட்டும் வகையில் பொன் கை  வேந்தன் என்னும் புனை பெயரிலேயே இவர் நாடகங்களை எழுதி இயக்கி வந்தமை என்னால் மறக்க முடியாதது .நெஞ்சை விட்டு   அகலவில்லை .எனக்கு கூட இவர் ஒரு உந்து சக்தியாக இருந்திருக்கிறார் என்றே கூறலாம் எனது பதின்ம வயதில் ஐவரும் இவரோடு சேர்ந்திருந்தவர்களின் செயல்பாடுகள் டுகள் என்னை பூரிக்க வைத்தன . ஒரு கட்டத்தில்ஒரு சில மாதங்கள் (1977) இவரது அரசியல் வழி என் நண்பன் எஸ் கே அவர்களின் வழியை விட்டு மாறிப்  போன போதும் அங்கே கூட நாகரீகமான அரசியல்வாதியாகவே கண்டு கொண்டேன் . இவரது ஆயுள் குறுகியதாக அமைந்து விட்டாலும் இவரது சமய ஆன்மீக சமூக சேவை அரசியல் கல்வி துறைகள் சார்பில் செய்த சேவைகளை புங்குடுதீவு மண்ணே  என்றும் நினைவில் வைத்திருக்கும் .நாங்களும் கூட.

இந்த பொது சே வையாளனுக்கு எமது மண்ணின் சார்பில் இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியை செலுத்தி நிற்போமாக