புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மே, 2013


கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக ப.சி. பிளான்..சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி?

கடந்த லோக்சபா தேர்தல் முடிவைக் கருத்தில் கொண்டும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமையின் அடிப்படையிலும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதிரடியாக திட்டம்

திருத்தணி அருகே அரசு பஸ் எரிப்பு
திருத்தணி மாவட்டம் கொடத்தூரில் அரசு பஸ் பா.ம.க., வினரால் வழிமறித்து எரிக்கப்பட்டது. 
இது சம்பந்தமாக போலீசார் தெரிவித்துள்ளதாவது: கொடத்தூர்பேட்டை இருந்து பொம்நாயக்கன்பேட்டை செல்லும் அரசு பஸ்சை பா.ம.க., வினர் வழிமறித்து கல் வீசியும் கண்ணாடியை உடைத்தும் எரித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர், மேலும் இது தொடர்பாக காஞ்சிபுரம் டி.ஐ.ஜி மற்றும் திருத்தணி எஸ்.பி, ஏ.எஸ்.பி தலைமையில் முகாமிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட பா.ம.,வினரை இன்று இரவுக்குள் கைது செய்வோம் என்று கூறினர்,

மதிமுக நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டது: வைகோ
தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் நிதி அளிப்புக் கூட்டத்துக்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று செய்தியாளர்களிடம் பேசினார். 

பாமக அங்கீகாரத்தை ரத்துச்செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
 

பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரத்தை சேர்ந்த வாரகி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த மனுவில், பாமக தொடர்ந்து சாதி வன்முறையை தூண்டும் வகையிலும், கலப்பு திருமணத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது,
பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு ஆகியோர் தொடர்ந்து சாதி மோதலை தூண்டும் வகையில் பேசி வருகிறார்கள். இதனால், இருபிரிவினர் இடையே அண்மையில் சாதி மோதல் ஏற்பட்டது. அண்மையில் மாமல்லபுரத்தில் நடந்த விழாவிலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் மனுதாரர் வாரகி தெரிவித்துள்ளார்.
மரக்காணம் அருகே நடந்த வன்முறைச் சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், இதனால் வட மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக அகில இந்திய தேர்தல் ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காஞ்சி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள், பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜெ.குரு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் வராகி கேட்டுக்கொண்டுள்ளார், 

ராமதாஸ், ஜி.கே.மணி உள்பட 6 பேரை மே 14 வரை காவலில் வைக்க திருக்கழுக்குன்றம் நீதிமன்றம் உத்தரவு
ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, குரு. கணேசன் உள்பட 6 பேர் மீது மாமல்லபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 6 பேர் மீதும் பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல் பிரிவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 பேரையும் மே 14ஆம் தேதி வரை காவலில் வைக்க திருக்கழுக்குன்றம் நீதிபதி சிவா உத்தரவிட்டுள்ளார்.



ராமதாஸ் மீது மேலும் இரண்டு வழக்குகள்? தமிழக அரசு மீது
பாமக வழக்கறிஞர் குற்றச்சாட்டு
பாமக நிறுவனர் ராமதாஸ் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் பாலு குற்றம் சாட்டியுள்ளார்.

ஐபிஎல்: சென்னை அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை 15 ரன் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. டாஸ் வென்று பேட்டிங் செய்த சென்னை அணி 4 விக்கெட்டுக்கு 186 ரன் குவித்தது. பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளைஇழந்து 171 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா 53 பந்துகளில் சதம் விளாசினார்.

சரப்ஜித் சிங் மரணம்: நீதி விசாரணைக்கு உத்தரவு
பாகிஸ்தான் லாகூர் நகரில் உள்ள லாக்பத் சிறையில் இந்தியர் சரப்ஜித் சிங் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தார். இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாண முதல்வர் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாகாண முதல்வர் (பொறுப்பு ) நிஜாம்சேத் கூறுகையில், சரப்ஜித் சிங் மரணம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கையினை 15 நாட்களுக்குள் சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
தவறான ரயில் பயணச்சீட்டைக் காட்டியதால் அமைச்சருக்கு அபராதம்
சுவிட்சர்லாந்தில் தவறான பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு தொடர்வண்டியில் பயணித்த அமைச்சர் தியரி குரோஸ்ஜீன்(Thierry Grosjean) என்பவர் பயணச்சீட்டு மதிப்பில் இரண்டு மடங்கை அபராதமாகச்

Chennai Super Kings 186/4 (20/20 ov)
Kings XI Punjab 171/6 (20.0/20 ov)
Chennai Super Kings won by 15 runs


சீமானும் வைகோவும் பிச்சை எடுத்தால் பிழைக்கலாம்!!

டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 44-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் தொடங்கியது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - கொல்கத்தா நைட்

ராமதாஸ் ஜாமீன் மனு - நாளை விசாரணை
ராமதாஸ் ஜாமின் மனு மீதான விசாரணை, விழுப்புரம் கோர்ட்டில் நடக்கிறது.   
விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற  பாமக நிறுவனர்

நடிகை ஜெயபிரதா காங்கிரசில் இணைந்தார்
பிரபல நடிகை ஜெயபிரதா, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஜெயபிரதா (53), முன்னர் தெலுங்கு சேதம்

கஜேந்திரகுமார் எங்கே?- மூகமூடி அணிந்த மர்மநபர்கள் அவரது வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தல்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டிற்குள் இன்று மலை 4 மணியளவில் நுழைந்த முகமூடியணிந்த மர்ம நபர்கள் நால்வர் கஜேந்திரகுமார் எங்கே எனக் கேட்டு அவரது உதவியாளரை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் எழுச்சி கொண்டது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மே தினக்கூட்டம்
தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாபெரும் மேதினக்கூட்டம் இன்று 01 ஆம் திகதி காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.
ஜெர்மனியின் பயெர்ன்  மியூனிச் கழகம் நிகழ்த்திய அற்புதம் 

இன்று பர்செலோனாவில் நடைபெற்ற ஐரோப்ப்பிய சம்பியன் லீக் கிண்ணத்துக்கான அரை இறுதி ஆட்டத்தின் மீள் விளையாட்டில் உலகின்

ad

ad