ஞாயிறு, நவம்பர் 17, 2013

சவேந்திர சில்வாவுடனான விவாதத்துக்கு எந்த நேரத்திலும் தயார்: கலும் மக்ரே
சனல்4 விவரண தயாரிப்பாளர் கலம் மெக்ரேயுடன் விவாதத்துக்கு தாம் தயார் என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே?": தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே, கொலைகார பூமியில் கொமன்வெல்த் மாநாடா, சர்வதேச விசாரணை தேவை , காணாமல் போனவர்கள் தொடர்பில் பதில்சொல், , எங்கள் வீடுகளை எம்மிடம் தா,
ரஷ்யாவில் விமான விபத்து: 44 பேர் பலி
ரஷ்யாவில் போயிங் விமானம் நொறுங்கி விழுந்து 44 பேர் உயிரிழந்தனர். கஸôன் விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தை தரை இறங்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கறுப்புப் பட்டியலில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் கறுப்புப் பட்டியலிடப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளை திருப்திப்படுத்தும் விதத்தில் கமரூன் செயற்படுகிறார்: கோத்தபாய குற்றச்சாட்டு
விடுதலைப்புலிகளை திருப்திபடுத்தும் முகமாகவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பில் செயற்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை விசாரிக்காவிட்டால் ஐநா மன்ற விசாரணை கோருவோம்--கேமரன் BBC

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கை மார்ச் மாதத்துக்குள் சுயாதீனமான ஒரு விசாரணையை அமைக்காவிட்டால், பிரிட்டன், இது தொடர்பாகhttp://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131116_cameronvideo.shtml ஒரு சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐநா மன்றத்திடம் கோரும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் எச்சரித்திருக்கிறார்.