புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2014

 கடந்த ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் இதுவரை அமுல்படுத்தவில்லை. இரா. சம்பந்தன்
வடக்கு மாகாணத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கூறியிருந்தாலும் இதுவரை அப்படியான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. எனினும் எமது நோக்கம் தொடர்பில் நாங்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருந்து வருகிறோம்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் கடந்த ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் இதுவரை அமுல்படுத்தவில்லை.
வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பதாக ஜனாதிபதி அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் உறுதியளித்தார்.
அந்த உறுதிமொழியை கூட அவர் இதுவரை நிறைவேற்றவில்லை. மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதாக வடக்கு மாகாண சபை தெரிவித்துள்ளது.
அதேபோல் வடக்கு மாகாண சபையின் சகல தேவைகள் குறித்து மத்திய அரசாங்கத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வடக்கு மாகாண மக்களின் பாரம்பரிய நிலங்கள் கூட அரசாங்கத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

ad

ad