புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2014

தேவேந்திரசிங் புல்லரை தூக்கிலிடத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!


பஞ்சாப்பைச் சேர்ந்த தேவேந்திரசிங் புல்லரை தூக்கிலிடத் தடை விதித்து உச்சநீதிமன்றம் 31.01.2014 வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தேவேந்திர சிங் புல்லரின் மருத்துவ அறிக்கையை ஒரு வாரத்தில் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மரண தண்டனையை குறைக்கக் கோரும் மனு பற்றி டெல்லி அரசு, மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அடுத்தக் கட்ட விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 


1993ல் டெல்லி குண்டுவெடிப்பில் 9 பேர் பலியான வழக்கில் தேவேந்திரசிங் புல்லருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 
வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ததை அடுத்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள தேவேந்திர சிங் புல்லர் தனது தண்டனையை குறைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார்.

ad

ad