புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2014

தவறான நோக்கததிற்காக வீடு புகுந்த கடற்படை சிப்பாயை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து,கட்டி வைத்து அடித்த பின்னர் பொலிசாரிடம் ஓப்படதனர் 
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விநாயகபுரம் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தவறான நோக்கததிற்காக வீடு புகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து, நையப்புடைத்து பளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அந்தச் சிப்பாயை பொலிஸார் இன்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தினர்.
சந்தேக நபரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விநாயகபுரம் பகுதியில் அதிகாலை வேளை ஒருவர் வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார் இதனை அவதானித்த அந்தப் பெண்ணின் கணவர் அந்த நபரைப் பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பி ஓட முயற்சித்துள்ளார்.
வீட்டாரின் அலறலைக் கேட்டு அயலவர்கள் விழித்துக் கொண்டு ஒன்றுகூடி குறித்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இது குறித்து பரமேஸ்வரா பள்ளிக்கு அருகிலுள்ள இராணுவ முகாமுக்கும் பளைப் பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த இராணுவத்தினர் குறித்த நபர் கடற்படையைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தினர் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனினும், அந்த நபரை தாம் பொலிஸாரிடம் ஒப்படைப்போம் எனக் கூறிய பொதுமக்கள் பளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் குறித்த சிப்பாய் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு இ அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற சிவலிங்கம் மற்றும் சுகிர்தன் ஆகியோர் சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவித்ததுடன், குடியிருப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்றும் இல்லையேல் சமூகமட்ட விழிப்புனர்வு குழுக்களை அமைத்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கடற்படைச் சிப்பாய்க்கு விளக்கமறியல்
யாழ்.வடமராட்சி மருதங்கேணி, விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதி வீடொன்றுக்குள் புகுந்த கடற்படை சிப்பாய் 22 வயதான குடும்பப் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதன்போது, அந்தப் பெண் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து அயல் வீட்டார்கள் ஓடி வந்து குறித்த கடற்படைச் சிப்பாயை பிடித்து தாக்கியுள்ளனர்.
பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கி பொலிஸாரிடம் கடற்படைச் சிப்பாயை ஒப்படைத்துள்ளனர்.
பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளான சிப்பாயை பளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் குறித்த சிப்பாய் ஆஜர்படுத்தப்பட்டதும், அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ad

ad