புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2014

இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து சென்னை அணி 5-வது வெற்றி

இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் மும்பையை சாய்த்து 5-வது வெற்றியை பெற்றது.

இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரில் மும்பையில் நேற்று முன் தினம் நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் சந்தித்தன.

காயம் காரணமாக நட்சத்திர வீரர் இலனோ சென்னை அணியில் இடம் பெறவில்லை.

விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தில் 25-வது நிமிடத்தில் மும்பை வீரர் ஆண்ட்ரே மொரிட்ஸ் அடித்த சுப்பர் ஷாட்டை, சென்னை கோல் கீப்பர் பிராசிக்லியானோ தடுத்து முறியடித்தார்.

முதல் பாதியில் இரு அணியினராலும் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

பிற்பாதியில் சென்னை வீரர்கள் அமர்க்களப்படுத்தினர். 71-வது நிமிடத்தில் சென்னை வீரர் புருனோ பெலிஸ்சரி எளிதாக கோல் போட்டு முன்னிலையை ஏற்படுத்தினார்.

81-வது நிமிடத்தில் ஜெய்ரோ சுவாரஸ் அடித்த ஷாட்டை மும்பை கோல் கீப்பர் சுப்ரதா பால் துள்ளி குதித்து தடுத்து வெளியே அனுப்பினார்.

ஆனால் அவர் சுதாரிப்பதற்குள் மற்றொரு சென்னை வீரர் தனசந்திர சிங் பந்தை கோலுக்குள் உதைத்து விட்டார்.

இதைத் தொடர்ந்து, 89-வது நிமிடத்தில் எதிரணி வீரர் பவுல் செய்ததால் சென்னை க்கு பிரிகிக் அதிர்ஷ்டம் கிட்டியது.

21.50 மீட்டர் தூரத்தில் இருந்து பிரிகிக் வாய்ப்பில் சென்னை அணியின் மாற்று ஆட்டக்காரர் கிறிஸ்டியன் டல்கோ உதைத்த ஷாட், சுவர் போன்று வரிசையாக நின்ற மும்பை வீரர்களையும், கோல் கீப்பர் சுப்ரதா பாலையும் ஏமாற்றி பிரமாதமாக கோலானது.

முடிவில் சென்னை அணி 3-0 என்ற கோல் கணக் கில் மும்பையை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது.

நாளை 7 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்ரர்ஸ்-எப்.சி கோவா அணிகள் மோதுகின்றன
.
 

ad

ad