புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2014

மைலோ கிண்ண காற்பந்து போட்டி முடிவுகள்

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மைலோ கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகள் நடை பெற்று வருகின்றன.

அரையிறுதிப் போட்டிகள் நேற்று முன்தினம் இடம் பெற்றன. இடம்பெற்ற முதலாவது அரையிறுதியில் நாவாந்துறை சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகமும்  உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகமும்  மோதின.

போட்டியில் ஆரம்பம் முதலே போட்டியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழக அணியினர் 15ஆவது நிமிடத்தில் ஜூட், 28ஆவது நிமிடத்தில் ஜெனட். 48வது நிமிடத்தில் மீண்டும் ஜூட் பெற்ற கோல்கள் மூலம் அதிரடி காட்டியது.

பதிலுக்கு உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி கோலெதுவும் பெறாமையால் இலகுவாக இப் போட்டியில் வெற்றி பெற்று நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதியில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழக அணியும் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழக அணியும் மோதின.

இப் போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் எதிரணியின் கோல்பரப்பை ஆக்கிரமித்த வண்ணமிருந்தன.

எனினும் முதல் பாதியாட்டம் வரை இரு அணிகளும் கோல்களெதனையும் பெற வில்லை.

இரண்டாவது பாதியாட்டம் ஆரம்பமாகி சிறிது நேரத்தில் போட்டியின் 37ஆவது நிமிடத்தில் நவிண்டில் கலை மதி விளையாட்டுக் கழக அணி வீரன் ரஜனிகாந் கிடை த்த சந்தர்ப்பத்தை கோலாக்கினார். தொடர்ந்து இரு அணிகளும் வேகமாக ஆட ஆரம் பித்தன.

இதன் காரணமாக போட்டி யின் 39ஆவது நிடத்தில் நவி ண்டில் கலைமதி விளையாட் டுக் கழக அணி வீரனொரு வருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட் டதை தொடர்ந்து போட்டி முடியும் வரை அவ்வணி 10 பேருடனேயே விளையாடியது.

இரண்டாவது பாதியில் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழக அணி தற்காப்பு ஆட்டத்தையே ஆடியது.

எனினும் குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழக அணி தமக்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களை தவற விட்டது. ‘

கோல்களிற்கான பல முயற்சிகள் கோல்கம்பத்தில் பட்டுச் சென்றதாலும் கோல்க ம்பத்தின் மேலாக சென்றத னாலும் பல வாய்ப்புக்கள் நழுவ விடப்பட்டன.

இறுதியில் போட்டியில் 10 பேருடனேயே ஆடிய நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழக அணி 1:0 என்னும் கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றத

ad

ad