புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 நவ., 2014

வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றம் இயல்பாகவே கலையும்
இலங்கை நாடாளுமன்றத்தில் 2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறும் போது பல முரண்பாடுகள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய வாக்கெடுப்பு மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதன்போது இரண்டு தரப்பிலும் கட்சிமாறல் சம்பவங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலவேளைகளில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமானால் நாடாளுமன்றம் இயல்பாகவே கலைந்துவிடும் நிலை உள்ளது.
இதனையடுத்து ஜனாதிபதி தமக்கிருக்கும் அதிகாரத்தை கொண்டு நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவிடலாம்.
அண்மையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, வரவு செலவுத் திட்ட கடைசி நாளில் பலர் தம்பக்கம் வருவர் என்று தெரிவித்திருந்தார்.
1960ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க, பதவி விலகி நாடாளுமன்றத்தை கலைத்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இறுதிவரை சபையில் இருக்கவேண்டும் என்று அரசாங்கக்கட்சி பிரதம அமைப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.