புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2014

பாராளுமன்றத்தில் இன்று கட்சித் தாவல்கள்? ஆளும் தரப்பால் தடுக்க முயற்சி
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை வரவு செலவுத் திட்டத்தில் இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பெரும் கட்சித் தாவல்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறும் போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்தவர்கள் எதிரணியுடன் இணைய வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன எதிரணியின் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடுக்க அரசாங்கத் தரப்பினர் கடும் பிரயத்தன ங்களை மேற் கொண்டு வருவதாக தெரியவருகிறது.

காணி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் மற்றும் மூத்த அமைச்சர் பியசேன கமகே ஆகியோர் அரசாங்கத்திலிருந்து வெளியேறி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கப் போவதாக செய்திகள் வெளியானதை அடுத்து, அரசாங்கத் தரப்பினர் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற பின்னர், மேலும் பலர் எதிர்தரப்பில் இணையலாம் என்றும் எதிரணியினர் தெரி விக்கின்றனர்.

அத்துடன், அரச அதிருப்தியாளர்களுக்கு பதவிகளை வழங்கி அவர்கள் எதிரணிக்குச் செல்வதைத் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எதிரணியினர் குற்றம் சுமத்துகின்றனர்.

வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி வாக்களிக்கும் என்ற போதிலும், அதனைத் தோற்கடிக்க விரும்பவில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க முனையவில்லை என்று கூறியுள்ள எதிரணியுடன் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாராளு மன்றத்தில் இன்று பாரிய கட்சித் தாவல்கள் இடம்பெறும் என தெரி வித்துள்ளார்.

அத்துடன், பாராளுமன்றத்தில் இன்று ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலரும் எதிரணியுடன் இணைந்து கொள்வார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவரான ஜோன் அமரதுங்க மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோரும்; குறிப் பிட்டுள்ளனர்.

இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பலர் ஆளுங்கட்சியுடன்  இணைந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஆளும்கட்சி உறுப்பினர்கள் எதிரணியுடன் இணைந்து கொள்வதைத் தடுப்பதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் அரச தரப்பினர், ஆளுங்கட்சிக்கு எதிர்க் கட்சி உறுப்பினர்களை இழுப்பதற்குப் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பேரமாகப் பேசி வரு வதாக தகவல்கள் வெளியாகியுள் ள

ad

ad