புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2014

போர்க்குற்ற விசாரணைகளை ஜாதிக யஹல உறுமய தடுக்கும் அக் கட்சி அறிக்கை

ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் இராணுவத் தளபதி அல்லது வேறு இராணுவ அதிகாரிகளாக இருந்தாலும் பயங்கரவாதத்தை ஒழித்த விடயம் தொடர்பில் போர்க்குற்றங்களை சுமத்த தமிழ் இனவாதிகள் முயற்சித்தால் அதனை தடுக்க ஜாதிக யஹல உறுமய உயிரை துச்சமென கருதிச் செயற்படும்.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்த எவருக்கும் எந்த சந்தர்ப்பதிலும் நாம் இடமளிக்க மாட்டோம்.

ஆனால் போர்க்குற்றங்கள் என்ற போர்வையில் நாட்டின் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் இல்லாமல் செய்ய முடியாது. நல்லாட்சி என்பது நாட்டுக்கு தற்போது அத்தியாவசியமானது.

ஊழல் மோசடிகளை ஒழித்தல், நியாயமான தேர்தலை நடத்துதல், குறிப்பாக நீதித்துறையில் சுதந்திரத்தை ஏற்படுத்துதல், அரச சேவையை வினைத்திறன்மிக்கதாக மாற்றுதல் போன்றவற்றை மேற்கொண்டு நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்லுதல் அத்தியாவசியமானது.

அதேபோல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தமக்கு தேவையான அமைச்சர்களின் எண்ணிக்கை நியமிப்பது, விரும்பிய எவரையும் உயர்நீதிமன்றத்திற்கு நியமிப்பது, தான் விரும்பியவர்களை அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமிப்பது போன்ற தன்னிச்சையான அதிகாரங்களை உடனடியாக கட்டுப்படுத்தியாக வேண்டும்.

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் விகிதாசார தேர்தல் முறையில் மாற்றங்களை செய்ய வேண்டும். போர்க்குற்றங்கள் என்ற போர்வையில் இவற்றை கீழடிப்புச் செய்ய முடியாது.

அப்படி செய்வது புலியை காட்டி முயலை கொல்வது போன்ற செயல். இதனால் இவை இரண்டையும் வௌவேறாக நாம் கருத வேண்டும்.

விடுதலைப் புலிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளிடம் நாங்கள் சிக்கியிருப்பதாக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அப்படியான எந்த சக்திகளிடமும் நாங்கள் சிக்கவில்லை எனவும் ஜாதிக ஹெல உறுமய குறிப்பிட்டுள்ள
து.

ad

ad