புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2015

அதிகரித்த பிராங்க் மதிப்பால் ஐரோப்பியர்கள் மகிழ்ச்சி, சுவிஸ் மக்கள் அதிர்ச்சி



சுவிட்சர்லாந்தின் பிராங்கின் மதிப்பு யூரோவிற்கு நிகராக அதிகரித்ததை தொடர்ந்து ஜெனிவாவில் உள்ள அந்நிய செலவாணி பரிமாற்ற கவுண்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது.
சுவிஸ் பிராங்கின் மதிப்பு 30 சதவீதம் அதிகரித்துள்ளதால் நாட்டின் தொழில் துறையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.
நாணய பரிமாற்ற அலுவலகத்தின் வெளியே இருந்த வனேசா என்ற 28 வயது பெண்மணி இதுபற்றி கூறுகையில், இந்த கூட்டத்தை பார்க்கையில் மீண்டும் கிறிஸ்துமஸ் திருவிழா வந்ததை போல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அந்த பெண்மணி மேலும் கூறுகையில், நான் இன்று காலையில் தான் இந்த செய்தியை அறிந்தேன். இதனை கேள்விபட்டதும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பெண், சுவிஸில் வேலைசெய்துகொண்டு அண்டைநாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாட்டை சேர்ந்தவர்களாக வரி செலுத்தும் 2,80,000-ல் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு ஒரு கண் சிமிட்டலில் சுவிஸ் வருமானம் 30 சதவிகிதம் உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
மேலும், சுவிஸ் அல்லாதவர்களுக்கு இந்த விடயம் வரமாக அமைந்தாலும், சுவிஸை சேர்ந்த மக்கள் இந்த செயலால் செய்வதறியாது அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad