புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2015

கும்கிகள் கொண்டாடிய யானைப் பொங்கல்


 
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்துள்ள கோழி கமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு 12 ஆண் யானைகளும், 10 பெண் யானைகளும் என 22 கும்கி யானைகள் உள்ளன. இந்த யானைகளுக்கு தற்போது நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு இங்கு யானைப்பொங்கல் கொண்டாட வனத்துறைக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் கோழி கமுத்தி நலவாழ்வு முகாமில் உள்ள யானைகளுக்கு பொங்கல் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக தகுதி வாய்ந்த 18 யானைகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றை பாகன்கள் குளிப்பாட்டி அலங்கரித்தனர். இந்த யானைகளுக்கு தலைவனாக கலீம் என்கிற கும்கி யானை தேர்வு செய்யப்பட்டு அதற்கு பட்டம் அணிவிக்கப்பட்டது.

இதையடுத்து கும்கி யானை கலீம் யானைகளின் அணிவகுப்புக்கு தலைமையேற்க 18 யானைகளும் ஒன்றன்பின் ஒன்றாக காலை 12.30 மணிக்கு டாப்சிலிப்புக்கு அழைத்து வரப்பட்டன.

அங்கு யானைப் பொங்கலை மழைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்கள் வைத்தனர். 7 மண் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் பொங்கியதும் அங்கு குழுமியிருந்த பெண்கள் குலவையிட தொடர்ந்து பூஜை நடைபெற்றது.

மதியம் 1 மணியளவில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கந்தசாமி யானைகளுக்கு பிடித்த கரும்பு, மண்டை வெல்லம், பொங்கல் மற்றும் கொப்பரை தேங்காய் உள்ளிட்டவற்றை வழங்கி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் யானைகளுக்கு உணவு பண்டங்கள் வழங்கினர்.

பின்னர் யானைகள் டாப் சிலிப் புல்வெளி பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டன. அங்கு அணிவகுத்து நின்ற யானைகள் சுற்றுலா பயணிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தின.

பாகன்களின் கட்டளைக்கு ஏற்ப சத்தம் எழுப்பி சுற்றுலா பயணிகளை கவர்ந்தன. இந்த யானைப் பொங்கலை காண வெளிநாடு, உள்நாடு என சுமார் 2 ஆயிரம் சுற்றுலா பயணிகள் டாப்சிலிப்பில் குவிந்திருந்தனர்.

ad

ad