புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2015

படகுகளை மீட்க இலங்கைவரும் குழு முதற்கட்டமாக 34 படகுகளை எடுத்துச் செல்வர்
                     
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களின்  படகுகளை மீட்பதற்கு 150 பேரடங்கிய குழுவொன்று இன்று பிற்பகல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைவார்கள்  என எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
கடந்த ஆண்டு இலங்கையின் எல்லையினை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களது 86 படகுகள் காங்கேசன்துறை, காரைநகர் மற்றும்  திருகோணமலை பகுதியில் இலங்கைகடற்படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.
 
எனினும் இந்திய மீனவர்கள்  அனைவரும் நீதிமன்றங்கள் ஊடாக விடுதலை செய்யப்பட்ட போதும் படகுகள்  தடுத்து வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும்  இரண்டு நாடுகளின் நல்லெண்ண நோக்கில் புதிய ஜனாதிபதி  மைத்திரிபால தடுத்து வைக்கப்பட்ட படகுகளை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.
 
அதற்கமைய இந்திய துணைத்தூதரகம் பொறுப்பேற்றதற்கு இணங்க நீதிமன்றங்களினால் படகுகள் விடுவிக்கப்பட்டது. அவ்வாறு விடுவிக்கப்பட்ட படகுகளை கொண்டு செல்வதற்காக இந்தியாவில் இருந்து மீன்வளத்துறை சார்ந்தவர்களும்  மீனவர்களும் நேற்று புறப்பட்டுள்ளனர்.
 
இவர்களைில் ஒரு தொகுதியினர் காங்கேசன்துறைக்கும் மேலுமொரு தொகுதியினர் திருகோணமலைக்கும் வருகை தரவுள்ளனர்.
 
அதற்கமைய நீதிமன்றங்களில் பாரப்படுத்தப்பட்ட இந்திய மீனவர்களது கைத்தொலைபேசி, ஜி.பி.ஆர்.எஸ் உள்ளிட்ட சான்றுப் பொருட்களை இன்று இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள்  நீதிமன்றங்களில் இருந்து பெற்றுக் கொண்டுள்ளனர்.
 
இவ்வாறு பெறப்பட்ட சான்றுப்பொருட்களை காங்கேசன்துறைக்கு வருகைதரும் குழுவினரிடம் கையளிக்கவுள்ளனர். முதற்கட்டமாக காங்கேசன்துறையில் நல்லநிலையில் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கின்ற 34 படகுகளுமே குறித்த குழுவினரினால் எடுத்துச் செல்லப்படவுள்ளன.
 
இதேவேளை திருகோணமலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒரு படகினையும் எடுத்துச் செல்லவுள்ளனர். இங்கு வருகை தரும் குழுவினர் மூன்று தினங்கள்  தங்கியிருப்பார்கள் என்றும் தூதரக வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=217023921817856478#sthash.wmHbO5Sc.dpuf

ad

ad