புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2015

தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வோம்: ரனில் மீண்டும் மிரட்டல்!

 எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை  சுட்டுக் கொல்லும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு உள்ளது என அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மீண்டும் கூறியுள்ளார்.

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வோம் என சமீபத்தில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

இதைத்தொடர்ந்து இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மீனவர்களை சுட்டுக்கொல்வோம் என்று கூறியதற்கு ரனில் விக்ரமசிங்கே வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.

இந்நிலையில், இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அதே கருத்தை மீண்டும் கூறியிருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை பயணம் குறித்து தனியார் டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்த ரனில் விக்ரமசிங்கே, ''வடக்கு மாகாணம் மட்டுமே இலங்கை இல்லை என்பதை இந்தியா உணர்ந்திருக்கிறது. இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மட்டுமின்றி யார் அத்துமீறி நுழைந்தாலும் அவர்களை சுட்டுக்கொல்லும் அதிகாரம் எங்கள் கடற்படைக்கு உள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்திருந்தபோது, தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக என்னிடம் கூறியிருக்கிறார். நாங்களும் இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண இணைந்து செயல்பட்டு வருகிறோம்'' எனக் கூறியுள்ளார்

ad

ad