புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2015

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு


 பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவின் பின்னர் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டத்திற்கு முரணானது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
நள்ளிரவின் பின்னர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது மாவட்டத்திற்குள் காணப்படும் தேர்தல் பிரசார அலுவலகமொன்றினூடாக மாத்திரமே செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்த பின்னர், தேர்தல் விதிகளை மீறி பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் சட்டவிதிகளை மீறுவோரைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ரோந்து சேவைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் கண்காணிப்புப் பிரிவினரின் உதவியுடன் குறித்த பொலிஸ் பிரிவுகளில் சட்டத்தையும், ஒழுங்கையும் பேணுவதற்கு பொலிஸார் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த திடீர் சுற்றிவளைப்புகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன், சட்டமீறல்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ad

ad