புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2015

சந்தையில் உடல் சிதறி பலியான 82 பேர்: தக்க பதிலடி கொடுத்துவிட்டோம் என கூறும் ஐ.எஸ் தீவிரவாதம் (வீடியோ இணைப்பு)

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 80 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகமாக வசிக்கின்ற ஜமீலா உணவுப்பொருள் சந்தையில் குளிர்சாதனப் பெட்டியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டிரக், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
ஜனநெருக்கடி மிகுந்த காலை நேரத்தில்(அந்நாட்டு உள்ளூர் நேரப்படி 6 மணிக்கு) நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில்,80 பேர் உயிரிழந்தனர், 125 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைக்கும் படையினரும், மீட்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
குண்டு வெடிப்பில், அப்பகுதியில் இருந்த கட்டடங்களும் சேதமடைந்தன. இந்த தாக்குதல் குறித்து ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தங்களது டுவிட்டர் பக்கத்தில், உங்கள் (ஷியா) குண்டு வீச்சில், எம் இஸ்லாமிய மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு, இது பதிலடி என தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் மூன்றில் ஒருபகுதியையும், அண்டை நாடான சிரியாவின் ஒரு பகுதியையும், ஷன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆக்கிரமித்து அப்பகுதியை இஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தி உள்ளது.
இந்த அமைப்பு மற்றொரு பிரிவான ஷியா முஸ்லிம்களை எதிரிகளாக கருதி, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ad

ad