புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2015

Fc Navanthurai என்பவர் Desu Avatharam மற்றும் 19 பேர் ஆகியோருடன்
நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய அல்பேட் எட்வினம்மா அவர்களின் 26ம் ஆண்டு ஞாபகர்த்த உதைபந்தாட்ட கரப்பந்தாட்ட,சுற்றுப் போட்டி ஞாயிற்றுக் கிழமை (20.09.2015) அன்று காலை 9.30 மணிக்கு ஸ்தான் மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.ஆரம்ப நிகழ்வாக கொடி ஏற்றல் இடம் பெற்றது அதன் பின் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்காகவும் இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் ஆரம்பமானது,இப்போடடி 3பிரிவுகளாக இடம் பெற்றது (13 வயது உட்பட்ட சிறுவர்கள்,பெரியவர்களுக்கான போட்டி,35 வயதுக்கு மேற்பட்டோர்) போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக இடம் பெற்று நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய அல்பேட் எட்வினம்மா அவர்களின் 26ம் ஆண்டு ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை தனதாக்க பிரான்ஸ் சென் பற்றிக்ஸ் வி.கழகம் எதிர் நல்லூர்ஸ்தான் வி.கழகம் விளையாடி 0.1 என்ற கோல் அடிப்படையில் நல்லூர்ஸ்தான் வி.கழகம் வெற்றியீட்டியது,,35 வயது பிரிவில் இறுதியாட்டத்திற்கு நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் எதிர் சென் கென்றிஸ் வி;.கழகம் விளையாடி இறுதியாக நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் 2.0 என்ற கோல் அடிப்படையில் நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது,13 வயது பிரிவில் பாடுமீன் வி.கழகம் எதிர் நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் விளையாடி இறுதியாக நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது இதில் பெருமைக்குரிய விடையாமாக 3பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் 2பிரிவு (13 வயது,35 வயது பிரிவில்)போட்டிகளில் நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியதுஎன்பது அறியத்தருகின்றோம்.அதிஸ்ட இலாபச்சீட்டு குலுக்கல் இடம் பெற்று வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டது இப் போட்டிகளை பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இப்போட்டிகளை சிறப்பாக நடத்தியதற்காக நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தினரை சம்மேளனத் தலைவர் வெகுவாக பாராட்டினார்.இப் போட்டிகளை கண்டு கழிப்பதற்கு இரு சமூக மக்களும் குடும்பம் குடும்பமாக வந்து இறுதிவரை நின்று சென்றது மட்டுமல்லாமல் இப்படியான நிகழ்வை ஒழுங்கு படுத்தி இரு பங்கு மக்களையும் ஒரே சமூகமாக வைத்துள்ள நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தினரை வெகுவாக பாரட்டியது மட்டுமல்லாமல் தமது ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குவதாக கூறிச் சென்றனர். Nusc 

ad

ad